முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்யாவில் இருந்து 2 விமானங்களில் வந்தது மருத்துவ உதவி பொருட்கள்

வியாழக்கிழமை, 29 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

ரஷ்யாவில் இருந்து 2 விமானங்களில் அனுப்பிய மருத்துவ உதவி பொருட்கள் வந்து சேர்ந்தன.

இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வரும் நிலையில், பல்வேறு நாடுகள் இந்தியாவுக்கு உதவ முன்வந்துள்ளன. ரஷ்யாவும், இந்தியாவுக்கு உதவுவதாக அறிவித்தது.  இந்திய -ரஷ்ய கூட்டுறவின் அடிப்படையில் கொரோனாவை எதிர்கொள்ள இந்தியாவுக்கு ரஷ்யா கணிசமான உதவிகளை வழங்கும். இதற்காக ரஷ்ய அவசர சேவைகளுக்கான விமானத்தை இந்தியாவுக்கு அனுப்ப ரஷ்ய தலைமை முடிவு செய்துள்ளது என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் அறிவித்தது.

அதன்படி, கொரோனாவை கட்டுப்படுத்த உதவும் மருந்துகள், 20 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 75 வென்டிலேட்டர்கள், 150 மானிட்டர்கள் மற்றும் பிற தேவையான மருத்துவ பொருட்கள் என மொத்தம் 22 மெட்ரிக் டன் எடையுள்ள பொருட்கள் 2 விமானங்களில் அனுப்பி வைக்கப்பட்டன. அந்த இரண்டு விமானங்களும் நேற்று டெல்லி வந்து சேர்ந்தன.  அந்த பொருட்கள் அனைத்தையும் உடனடியாக இந்தியாவிற்குள் அனுமதித்து, விநியோகம் செய்வதற்கு உடனடியாக அனுமதி வழங்கப்பட்டதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் மற்றும் சுங்கத்துறை தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து