முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீப்பற்றி எரியும் வீடு முன் நின்று சிரிக்கும் பெண் குழந்தையின் பிரபல புகைப்படம் ரூ. 3.5 கோடிக்கு ஏலம்

ஞாயிற்றுக்கிழமை, 2 மே 2021      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் : தீப்பற்றி எரியும் வீடு முன் நின்று சிரிக்கும் பெண் குழந்தையின் புகைப்படம் ரூ. 3.5 கோடிக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. 

அமெரிக்காவின் வடக்கு கலிபோனியா மாகாணத்தில் வசித்து வந்தவர் டேவ். இவரின் மகள் பெயர் ஜூரோத். 2005-ம் ஆண்டு ஜூரோத்திற்கு 10 வயது நிரம்பி இருந்தது. அந்த ஆண்டு ஜூரோத் வசித்து வந்த வீட்டின் அருகே இருந்த மற்றொரு வீடு மீது எதிர்பாராத விதிமாக தீப்பற்றியது. இதனால், டேவ் தனது மகள் ஜூரோத்தை தனது வீட்டில் இருந்து வெளியே அழைத்து சென்று பக்கத்து வீட்டில் பற்றி எரியும் தீயை மீட்புக்குழுவினர் அணைக்கும் நடவடிக்கைகளை பார்வையிட்டார்.

அப்போது, அந்த வீடு தீப்பற்றி எரியும் போது 10 வயது சிறுமியான ஜூரோத் அந்த வீட்டின் அருகில் முகத்தில் புன்னகையில் நின்று கொண்டிருந்தார். தனது மகள் ஜூரோத் பற்றி எரியும் வீடு முன் சிரித்துக் கொண்டு நிற்பதை டேவ் புகைப்படமாக எடுத்தார்.  அந்த புகைப்படம் டிசாஸ்டர் கெல் என்ற பெயரில் சமூக வலைதளங்கள் தற்போது மிகவும் வைரலாக வருகிறது. இந்த புகைப்படத்தை மையமாக வைத்து பல்வேறு மீம்கள் வெளியாகி வருகின்றன. பக்கத்து வீட்டுக்காரரின் வீடு பற்றி எரியும் போது அந்த சிறுமி சிரிக்கும் புகைப்படம் மிகவும் பிரபலமானது. அந்த புகைப்படத்தின் உண்மையான பிரதி டேவின் மகள் ஜூரோத்தின் கைவசம் இருந்து வந்தது. 

இந்நிலையில், ஜூரோத் தற்போது 21 வயதை எட்டியுள்ளார். அவர் தனது பிரபல புகைப்படமான வீடு பற்றி எரியும் போது அதை பார்த்து சிரிக்கும் வகையிலான அந்த புகைப்படத்தின் உண்மையான புகைப்படத்தை ஏலத்தில் விற்பனை செய்ய திட்டமிட்டார். அதற்காக, ஏலம் விடப்பட்டது.  அந்த ஏலத்தில் டிசாஸ்டர் கெல் ஜூரோத் பக்கத்து வீட்டுக்காரரின் வீடு எரியும் போது சிரிக்கும் உண்மையான புகைப்படம் 4 லட்சத்து 73 ஆயிரம் டாலருக்கு ஏலம் விடப்பட்டது. அந்த ஏலத்தின் இந்திய மதிப்பு 3 கோடியே 50 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் ஆகும். இந்த பணத்தை தனது படிப்பு செலவுக்கும், நற்பணிகளுக்கும் பயன்படுத்த உள்ளதாக தற்போது 21 வயது நிரம்பிய ஜூரோத் என தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து