முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சூடானில் இருதரப்பினர் இடையே நடந்த பயங்கர மோதல்: 36 பேர் பலி

செவ்வாய்க்கிழமை, 8 ஜூன் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

கார்டூம் : சூடான் நாட்டில் இருதரப்பினருக்கு இடையே நடந்த பயங்கர மோதலில் 36 பேர் உயிரிழந்தனர்.

வடகிழக்கு ஆப்பிரிக்காவில் சூடான் அமைந்துள்ளது. இந்நாட்டில் 2013-ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நிலவி வந்தது. இந்த போரால் பழங்குடியின மக்கள் தங்கள் சொந்த இடங்களை விட்டு வேறுபகுதிகளுக்கு தஞ்சம் அடைந்தனர். ஆனால் தற்போது போர் சற்று குறைந்ததையடுத்து இடம்பெயர்ந்தவர்கள் தங்கள் சொந்த பகுதிகளுக்கு திரும்பியவாறு உள்ளனர். ஆனால் ஏற்கனவே கைவிடப்பட்ட பகுதிகளை வேறு சிலர் கைப்பற்றி விவசாயம் போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நிலத்தின் சொந்த உரிமையாளர்களுக்கும், போரால் கைவிடப்பட்ட நிலத்தை கைப்பற்றியவருக்கும் இடையே உரிமை சண்டை அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது.

இந்நிலையில், அந்நாட்டின் தெற்கு டர்பர் மாகாணத்தின் உம் டப்யூ பகுதியில் வசித்து வரும் பழங்குடியின ஆப்ரிக்க மக்களுக்கும், மற்றொரு தரப்பான அரபு மக்களுக்கும் இடையே சனிக்கிழமை முதல் மோதல் ஏற்பட்டுள்ளது.  இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி கொண்டனர். இந்த மோதலில் துப்பாக்கிச்சூடு சம்பவங்களும் அரங்கேறியுள்ளது. மோதல் தொடர்ந்து சுற்று வட்டாரப் பகுதிகளுக்கும் பரவியுள்ளது.  இந்த மோதலில் இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் படுகாயமந்துள்ளனர். மோதல் சம்பவங்கள் மேலும் நடைபெறுவதை தடுக்க அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து