முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பு மருந்து உருவாக்கத்தை துரிதப்படுத்த வேண்டும் : துணை ஜனாதிபதி வெங்கையா வலியுறுத்தல்

சனிக்கிழமை, 31 ஜூலை 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

ஐதராபாத் : குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பு மருந்து உருவாக்குவதை துரிதப்படுத்த வேண்டும் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வலியுறுத்தினார்.

ஐதராபாத்தின் ஜெனோம் வேலி பகுதியில் உள்ள பாரத் பயோடெக் லிமிடெட் நிறுவன ஆலையை பார்வையிட்ட பின்னர் விஞ்ஞானிகள் மற்றும் பணியாளர்களிடையே பேசிய அவர் கூறியதாவது:-

கோவிட்-19 தடுப்பு மருந்து வழங்கல் நடவடிக்கை நாடு தழுவிய மக்கள் இயக்கமாக இருக்க வேண்டும். தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டு தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும்.  ஒவ்வொருவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென்றும், நம்மையும் நம்மை சுற்றியிருப்பவர்களையும் பாதுகாக்க இதை விட சக்தி வாய்ந்த வழி வேறெதுவும் இல்லை.

தடுப்பு மருந்து தயக்கத்திற்கு இடமில்லை.  குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பு மருந்து உருவாக்கத்தை துரிதப்படுத்த வேண்டும். வைரஸிடம் இருந்து குழந்தைகளை காப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

கோவிட்-19 பாதிப்புகள் தற்காலிகமாக குறைந்திருப்பதால் அஜாக்கிரதையுடன் மக்கள் இருக்கக் கூடாது. கோவிட் விதிமுறைகளை மீறாமல் பொறுப்புள்ள மக்களாக நாம் நடந்து கொள்வோம். மக்கள் முகக் கவசங்களை அணிவதுடன் தனிநபர் இடைவெளி மற்றும் சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும்.  அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் சரியான கோவிட் நடத்தை விதிமுறையை பின்பற்ற வேண்டும். பொறுப்புடன் நடந்து கொள்வது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

மூன்றாவது அலையை நாம் வரவேற்கக் கூடாது. உலகத்தின் மருந்தகம் எனும் சர்வதேச பாராட்டை இந்தியா பெற்றிருக்கிறது. 50 சதவீத தடுப்புமருந்தை இந்தியா விநியோகிக்கிறது. பொது மருந்துகளின் மிகப்பெரிய உற்பத்தியாளராக இருக்கிறது. எய்ட்ஸை கட்டுப்படுத்தும் மருந்துகளில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவற்றை இந்திய மருந்து நிறுவனங்கள் விநியோகிக்கிறது.  இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து