வில்வித்தை: அடானு தாஸ் தோல்வி

Atanu-Das 2021 07 31

வில்வித்தை போட்டியில் இந்திய வீரர் அடானு தாஸ் 6-4 என்ற புள்ளி கணக்கில் ஜப்பானிய வீரரான டகாஹரு புருகவாவிடம் தோல்வி அடைந்து உள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன் நடந்த போட்டியில் அடானு தாஸ், சீன தைபேவின் டெங் யூ-செங் என்பவரை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.  

தொடர்ந்து நடந்த போட்டியில், தென்கொரியாவின் ஓ ஜின்-ஹையெக் என்பவரை 6-5 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தினார். இதனால், எலிமினேசன் சுற்றுக்கு தகுதி பெற்ற அவர், நேற்று நடந்த போட்டியில் தோற்று வெளியேறி உள்ளார்.  இதனால் காலிறுதிக்கு செல்லும் வாய்ப்பினை அவர் இழந்துள்ளார்.

குத்துச்சண்டை: அமித் பங்கல் தோல்வி

ஆண்களுக்கான குத்துச்சண்டை ஃப்ளை (45-52 கிலோ) பிரிவு ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் இந்தியாவின் அமித் பங்கல் கொலம்பியாவின் யுபெர்ஜென் ஹெர்னி மார்ட்டினெஸ் ரிவாஸை எதிர்கொண்டார்.

மூன்று ரவுண்டுகள் முடிவில் 29-28, 27-29, 27-30, 28-29, 28-29 (1:4) என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியடைந்தார். ஐந்து நடுவர்கள் மூன்று சுற்றுகளில் மதிப்பெண் வழங்குவார்கள். அதில் ஒருமுறை மட்டுமே அமித் பங்கல் சாதகமான புள்ளிகள் கிடைத்தன.

50 மீ ரைபிள்: இந்திய வீராங்கனைகள் தோல்வி

ஒலிம்பிக்கில் மகளிருக்கான 50 மீட்டர் ரைபிள் பிரிவுக்கான போட்டியில் இந்திய வீராங்கனைகளான அஞ்சும் மவுத்கில், தேஜஸ்வினி சாவந்த் ஆகியோர் கலந்துக்கொண்டனர். இதில் இருவரும்  15 மற்றும் 33 ஆவது இடங்களை பிடித்து தோல்வியை தழுவினர்.

இதன் காரணமாக 50 மீட்டர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் பதக்க வாய்ப்பு பறிபோனது. டோக்கியோ ஒலிம்பிக்கில் துப்பாக்கிச் சுடுதலின் பல்வேறு பிரிவுகளில் இந்தியா இம்முறை தொடர் தோல்விகளையே சந்தித்து வருவது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நைஜீரிய வீராங்கனை சஸ்பெண்டு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான 100 மீட்டர் அரை இறுதியில் நைஜீரிய தடகள வீராங்கனை பங்கேற்க தகுதி பெற்று இருந்தார். அவர் தகுதி சுற்றில் 11.05 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து முன்னேறினார். இந்த நிலையில் நைஜீரிய தடகள வீராங்கனை ஒகாபர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். அவர் உடல் பலத்தை அதிகரித்துக் கொள்வதற்கான ஊக்க மருந்தை பயன்படுத்தி இருந்தது தெரிய வந்தது.

கடந்த 19-ந்தேதி நடந்த போட்டியில் அவர் ஊக்க மருந்தை உட்கொண்டுள்ளார். இதைத் தொடர்ந்து தடகள ஒருமைப்பாட்டுக் குழு அவரை தற்காலிகமாக சஸ்பெண்டு செய்துள்ளது. இந்த சஸ்பெண்டு காரணமாக நேற்று நடைபெற்ற 100 மீட்டர் பந்தயத்தில் அவரால் பங்கேற்க முடியவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து