தமிழகத்தில் மேலும் 1,639 பேருக்கு தொற்று

coronavirus-1

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1,639 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,631-ல் இருந்து 1,639 ஆக அதிகரித்துள்ளது. 1,58,623 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 1,639 ஆக உள்ளது. சென்னையில் மேலும் 170 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.  கொரோனாவில் இருந்து மேலும் 1,517 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 25,80,686 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 16,399 ஆக உள்ளது.  கொரோனாவால் மேலும் 27 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35,146 ஆக உயர்ந்துள்ளது.  அரசு மருத்துவமனைகளில் 21 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 6 பேரும் உயிரிழந்தனர்.  

 

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இணை நோய்கள் ஏதும் இல்லாத 2 பேர் உயிரிழந்தனர்.  தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 50 வயதுக்குட்பட்ட 4 பேர் உயிரிழந்தனர்.   தஞ்சையில் 87 ஆக இருந்த கொரோனா பாதிப்பு 117 ஆக அதிகரித்துள்ளது.  திருப்பூரில் 113 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு 91 ஆக குறைந்துள்ளது.  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து