எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மகளிர் உரிமைத் தொகையாக ரூ. 5,000 நேற்று காலை வரவு வைக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பிப்ரவரி மாதத்துக்கான ரூ. 1,000 பணத்துடன், மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களுக்கு முன்பணமாக ரூ. 2,000 மற்றும் கோடைக்கால சிறப்பு தொகுப்பாக ரூ. 2,000 என மொத்தம் ரூ. 5,000 வழங்கப்பட்டுள்ளது.
எதற்காக பணம்?
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட விடியோ தெரிவித்திருப்பதாவது:- இன்று (நேற்று) காலை, அரசு சார்பில் 5 ஆயிரம் ரூபாய் உங்கள் கணக்கில் வந்திருக்கும். எதற்காக இந்தப் பணம்? நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்றபோது கொரோனா உச்சத்தில் இருந்தது. அதைச் சமாளித்து மக்களின் உயிரைக் காத்தது மட்டுமல்ல, அவர்கள் வாழ்வாதாரத்தைக் காக்க 4 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகையையும் வழங்கினோம்.
கடும் நிதி நெருக்கடி...
சென்ற ஆட்சி விட்டுவிட்டுப் போன கடுமையான நிதி நெருக்கடியைச் சமாளித்து, ஆட்சிக்கு வந்ததுமே பல திட்டங்களை நிறைவேற்றினோம். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்தேன். அப்போது, "இது சாத்தியமே இல்லை" எனச் சிலர் சொன்னார்கள்.
திட்டம் விரிவாக்கம்...
ஆனாலும், நிதி நெருக்கடியைச் சமாளித்து, மத்திய அரசின் ஓரவஞ்சனையையும் மீறி, கடந்த 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் "கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட"த்தை வெற்றிகரமாகச் செயல்படுத்திக் கொண்டு வருகிறோம். முதலில், ஒரு கோடியே 13 லட்சம் மகளிருக்குப் பயனளித்த இந்தத் திட்டம், அண்மையில் விரிவுபடுத்தப்பட்டு, தற்போது ஒரு கோடியே 31 லட்சம் குடும்பத் தலைவிகள் பயன்பெற்று வருகிறார்கள். இது வெறும் நிதியுதவி அல்ல.
அத்தியாவசியச் செலவுகள்...
சமூகத்தில் பெண்கள் ஆற்றும் பங்களிப்பை அங்கீகரிப்பதற்காகக் கொடுக்கப்படுகிற உரிமைத்தொகை. இந்தத் தொகையை வைத்து, அன்றாட வீட்டுச் செலவுகள், குடும்பத்தில் ஏற்படும் மருத்துவச் செலவுகள், குழந்தைகளுக்கான கல்விச் செலவுகள் என பல அத்தியாவசியச் செலவுகளை, மகளிர் தாங்களே நிறைவு செய்ய இந்த திட்டம் வழிவகுத்தது.
தொகையை நிறுத்த...
அதனால்தான், ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி என்பது, ஒவ்வொரு குடும்பத்தலைவியும் ஆவலோடு எதிர்பார்க்கும் நாளாக அமைந்துள்ளது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்தத் திட்டத்தை மற்ற மாநிலங்களும் பின்பற்றி வருகிறார்கள். இந்த உரிமைத் தொகையை மேம்படுத்த வேண்டும் என நாம் செயல்பட்டு வந்தால், அதற்கு எதிராக டெல்லியில் இருக்கும் ஒரு கூட்டமும், தமிழ்நாட்டில் அவர்களுக்கு அடிமையாக இருக்கும் இன்னொரு கூட்டமும், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலைக் காரணம் காட்டி, அடுத்த 3 மாதங்களுக்கு இந்த மகளிர் உரிமைத் தொகையை நிறுத்த, சூழ்ச்சி செய்வதாகத் தகவல் வருகிறது. இதுபற்றி நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் சிலர் முயற்சி செய்வதாகச் செய்திகள் வருகிறது.
உணர முடிகிறது.....
ஒரு கோடியே 31 லட்சம் மகளிர் உழைப்பை அங்கீகரிக்கும் இந்த திட்டத்தை 3 மாதம் நிறுத்தி வைத்தால் நீங்கள் எவ்வளவு சிரமங்களுக்கு ஆளாவீர்கள் என உங்கள் வீட்டில் ஒருவனாக இருக்கும் எனக்கு நன்றாகத் தெரியும். கடும் வெய்யிலில் வேலைக்குப் போக கடினமான கோடைக்காலத்தில், இந்தத் தொகை நிறுத்தப்பட்டால், உங்களுக்கு எவ்வளவு வலி ஏற்படும் என என்னால் உணர முடிகிறது.
சிறப்புத் தொகை...
உங்கள் மாதாந்திர செலவை, எப்படி சமாளிப்பீர்கள்? உங்கள் குடும்பத்தில் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு மாத்திரை வாங்கிக் கொடுக்க முடியுமா? குழந்தைகள் தேர்வு எழுதும் காலத்தில் அவர்களுக்கு உணவு கொடுப்பதில் இருந்து, தேவையான கல்விச் செலவுகளைச் செய்ய முடியுமா? இந்தக் கஷ்டத்தை எல்லாம் நினைத்துப் பார்த்துதான், ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளேன். அதன்படி, இந்த பிப்ரவரி மாதம் மட்டுமில்லாமல் அடுத்த 2 மாதம்… அதாவது மார்ச், ஏப்ரலுக்கான உரிமைத்தொகை தவணைகளையும் சேர்த்து 3 ஆயிரம் ரூபாயும், கூடுதலாகக் கோடைக்காலச் செலவுகளை கருத்தில் கொண்டு மேலும் 2 ஆயிரம் ரூபாய் சிறப்புத் தொகையும் சேர்த்து, இந்த பிப்ரவரி மாதம் 5 ஆயிரம் ரூபாயைச் சிறப்பு மகளிர் உரிமை தொகையாக ஒரு கோடியே 31 லட்சம் பெண்களுக்கு வழங்க உத்தரவிட்டிருக்கிறேன்.
கவனமாகச் செலவிடுங்கள்...
இந்த தருணத்தில் இன்னொரு அன்பான வேண்டுகோள்: இந்த 5 ஆயிரம் ரூபாயை அடுத்த 3 மாதத்துக்கு நீங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதால், கொஞ்சம் கவனமாகச் செலவிடுங்கள். முடிந்த அளவுக்குச் சேமிக்கவும் பாருங்கள். உங்கள் ஆதரவோடு அடுத்து அமையப் போவதும் திராவிட மாடல் ஆட்சிதான். அதனால், நீங்கள் மனம் குளிரும் சிறப்பான ஒரு அறிவிப்பையும் இந்த நேரத்தில் சொல்ல விரும்புகிறேன்.
2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி...
அடுத்த திராவிட மாடல் 2.0 ஆட்சிக் காலத்தில், உங்களின் உரிமைத்தொகை 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். சொன்னால் சொன்னதைச் செய்யும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி இது. இதையும் எப்படி செய்வோம் என்று சிலர் கேட்கலாம். கடந்த ஆட்சியின் 10 ஆண்டுகளில், தமிழ்நாடு அடைய முடியாத பொருளாதார வளர்ச்சியை இந்தியாவே திரும்பிப் பார்க்கும் அளவுக்குச் சாதித்துக் காட்டியவர்கள் நாங்கள். அதனால், எந்தத் தடை வந்தாலும் அதையெல்லாம் தாண்டி, தமிழ்நாடே வெல்வோம் ஒன்றாக எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
தி.மு.க.வுக்கு வெற்றி பிரகாசமாக உள்ளது: அமைச்சர் துரைமுருகன்
16 Mar 2026சென்னை, வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு வெற்றி பிரகாசமாக உள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத்தேர்தல் அதிகாரி ஆலோசனை
16 Mar 2026சென்னை, தமிழக பேரவைத் தேர்தலையொட்டி அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நேற்று (மார்ச் 16) ஆலோசனை மேற்கொண்டார்.
-
பா.ஜ.க.வுடன் செல்பவர்கள் யாராக இருந்தாலும் தோல்வி நிச்சயம்: டி.கே.எஸ்.இளங்கோவன் கருத்து
16 Mar 2026சென்னை, பா.ஜ.க.வுடன் யார் சென்றாலும் அவர்களுக்கு தோல்விதான். பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததால்தான் 2001-இல் தி.மு.க. தோற்றது.
-
6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சீனா-வடகொரியா இடையே விமான சேவை தொடக்கம்
16 Mar 2026பெய்ஜிங், சீனா- வடகொரியா இடையேயான விமானப் போக்குவரத்து கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டில் முற்றிலும் நிறுத்தப்பட்டது.
-
காவல்துறையினரை தாக்கி தப்பிக்க முயற்சி: சென்னை மாதவரத்தில் ரவுடி என்கவுண்டர் சுட்டுக்கொலை
16 Mar 2026சென்னை, சென்னை மாதவரத்தில் ரவுடி தொப்பை கணேஷ் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
-
மகளிா் ஆதரவு இருக்கும் வரை, தி.மு.க. அரசை எவராலும் வீழ்த்த முடியாது: முதல்வர்
16 Mar 2026சென்னை, பெண்கள் நம்முடன் இருக்கும்போது, நம்மை யாராலும் வீழ்த்த முடியாது.
-
வாக்குகளை எண்ண கூடுதல் இடைவெளி: தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம்
16 Mar 2026புதுடெல்லி, வாக்கு எண்ணிக்கைக்கு கூடுதல் இடைவெளி உள்ளதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்ததை அடுத்து இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகைகளால் பாராளுமன்ற மாநிலங்களவைக்கு வரும் 19, 20-ம் தேதிகளில் விடுமுறை
16 Mar 2026டெல்லி, நவராத்திரி, ரம்ஜான், குடீ பாடவா ஆகிய பண்டிகைகள் வருவதால் பாராளுமன்ற மாநிலங்களவைக்கு வரும் 19,20ம் தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அடுத்த ஒரு மாதத்திற்கு தி.முக.வினர் ஓய்வின்றி தோ்தல் பணியாற்றுங்கள்: கட்சியினருக்கு துணை முதல்வர் உதயநிதி அறிவுரை
16 Mar 2026சென்னை, அடுத்த ஒரு மாதம் தி.மு.க.வினா் ஓய்வின்றி தோ்தல் பணியாற்ற வேண்டும் என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தினாா்.
-
எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்திய அகாடமி விருது அறிவிப்பு
16 Mar 2026சென்னை, 2025-ம் ஆண்டுக்கான சாகித்திய அகாடமி விருது தமிழ் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், அரசியல்வாதிகளுக்கு தேர்தல் ஆணையம் புதிய கட்டுப்பாடு
16 Mar 2026சென்னை, மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், அரசியல்வாதிகளுக்கு தேர்தல் ஆணையம் புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது.
-
தூத்துக்குடி, விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் 5 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை மதுரை ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
16 Mar 2026மதுரை, தூத்துக்குடி, விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் குற்றவாளிகளை கண்டு பிடிக்கும் வகையில் சந்தேகத்துக்கு இடமான 5 பேரிடம் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு டி.என்.ஏ பரிசோதன
-
ஈரானில் இருந்து மீட்கப்பட்ட 550 இந்தியர்கள் ஆர்மீனியாவுக்கு ஜெய்சங்கர் நன்றி
16 Mar 2026புதுடெல்லி, ஈரானில் இருந்து அர்மீனியா வழியாக 550க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்கப்பட்டதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
-
அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிகள்: விளம்பரங்கள், போஸ்டர்களை அகற்றும் அடிக்கும் பணி தீவிரம்
16 Mar 2026சென்னை, சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில், தமிழகம் முழுவதும் விளம்பரங்கள் மீது பெயிண்ட் அடித்து மறைக்கும் பணிகளும் போஸ்டர்கள் அகற்றும் பணிகளும
-
மேற்குவங்க மாநிலத்திற்கு புதிய தலைமைச்செயலாளர் நியமனம்: தேர்தல் ஆணையம் உத்தரவு
16 Mar 2026கொல்கத்தா, மேற்கு வங்க மாநிலத்தின் புதிய தலைமைச் செயலாளராக துஷ்யந்த் நாரியாலாவை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
நேபாளத்தில் சாலை விபத்தில் பலியான 7 பேர் உடல்களை கொண்டு வர தமிழ்நாடு அரசு நடவடிக்கை
16 Mar 2026சென்னை, நேபாளத்துக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொண்டபோது சாலை விபத்தில் சிக்கி 7 தமிழா்கள் உயிரிழந்தனா்.
-
மத்திய கிழக்கில் மோதலால் 4,335 இந்திய விமானங்கள் ரத்து: மத்திய அரசு தகவல்
16 Mar 2026புதுடெல்லி, மேற்காசிய மோதலால் காரணமாக இந்திய விமானங்கள் ரத்து குறித்து மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
-
பா.ஜ.க.வுடன் கூட்டணி பேச்சா? வதந்திகளை நம்ப வேண்டாம் என த.வெ.க. திட்டவட்டமாக மறுப்பு
16 Mar 2026சென்னை, தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், பா.ஜ.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாகத் தகவல் வெளியானதற்கு அக்கட்சியின்
-
சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்
16 Mar 2026லாஸ்ஏஞ்சல்ஸ், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நேற்று நடைபெற்ற ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில், சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை ஒன் பேட்டில் ஆஃப்டர் அனத
-
பாலஸ்தீனத்துக்கு விடுதலை வேண்டும்: ஆஸ்கர் விழா மேடையில் ஹாலிவுட் நடிகர் ஜேவியரின் பேச்சால் பரபரப்பு
16 Mar 2026லாஸ்ஏஞ்சல்ஸ், ஹாலிவுட் நடிகர் ஜேவியர் பார்டெம் ஆஸ்கர் விருது விழாவில், “போர் வேண்டாம். பாலஸ்தீனத்துக்கு விடுதலை வேண்டும்” எனப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
-
த.வெ.க. - என்.டி.ஏ. கூட்டணி குறித்து இதுவரை பேச்சு நடத்தப்படவில்லை: செங்கோட்டையன் பேட்டி
16 Mar 2026கோவை, தமிழக வெற்றிக்கழகம் மற்றும் என்.டி.ஏ. கூட்டணி குறித்து இதுவரை எந்த விதமான கருத்து பரிமாற்றமும் நடைபெறவில்லை என்று த.வெ.க.
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : சென்னையில் விசாரணையை நடத்த சி.பி.ஐ.க்கு விஜய் கடிதம்
16 Mar 2026சென்னை, கரூா் கூட்ட நெரிசல் வழக்கில் சென்னை அல்லது தமிழ்நாட்டில் ஏதேனும் ஓரிடத்தில் சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சி.பி.ஐ.
-
திருப்பூரில் இருவேறு இடங்களில் உரிய ஆவணங்கள் இல்லாத 41 லட்சம் ரூபாய் பறிமுதல்: தேர்தல் பறக்கும் பட்டையினர் நடவடிக்கை
16 Mar 2026திருப்பூர், திருப்பூரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட ரூ. 41 லட்சம் தேர்தல் பறக்கும் பட்டையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
-
தேர்தல் நடத்தை விதி அமல் எதிரொலி: மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் பொதுமக்கள் குறைதீர் மனுக்கள் பெட்டி
16 Mar 2026கோவை, தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் பொதுமக்கள் குறைதீர் மனு பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
16 Mar 2026- மன்னார்குடி ராஜகோபலசுவாமி தங்க சூரிய பிரபை வேணுகோபாலன் திருக்கோலமாய் காட்சி.
- தொட்டியம் காளியம்மன் பவனி


