முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 12 செப்டம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 

தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பசலனம் காரணமாக நீலகிரி, கோவை, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி , மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி மாவட்டங்கள் மற்றும் சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து