முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊரக உள்ளாட்சி தேர்தல்: விருப்ப மனு அளிக்க தி.மு.க. தலைமை அழைப்பு

புதன்கிழமை, 15 செப்டம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புவோர் இன்று(நேற்று) முதல் விருப்ப மனு அளிக்கலாம் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 6 மற்றும் 9-ம்  தேதிகளில் நடைபெறுகிறது. இதுதவிர 28 மாவட்டங்களில் காலியாக உள்ள பதவிகளுக்கு அக்டோபர் 9-ம் தேதி தற்செயல் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. 

இந்நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புவோர் இன்று(நேற்று) முதல் விருப்ப மனு அளிக்கலாம் என்று அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.  இது தொடர்பாக தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், 

தி.மு.க. சார்பில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோர் இன்று(நேற்று) முதல் விருப்ப மனு அளிக்கலாம்.  மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினருக்கு ரூ.10 ஆயிரம், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினருக்கு ரூ.5 ஆயிரம் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  ஆதிதிராவிடர், பெண்கள் பாதித்தொகையை கட்டணமாக செலுத்த வேண்டும்.  விருப்ப மனுக்களை தி.மு.க. மாவட்ட செயலாளரிடமோ அல்லது அண்ணா அறிவாலயத்திலோ ஒப்படைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து