கே.சி.வீரமணிக்கு சொந்தமான இடங்களில் ரொய்டு : ஜெயக்குமார் விமர்சனம்

Jayakumar 2021 08 02

முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான இடங்களில் நடைபெறும் வருமான வரி சோதனை உள்நோக்கம் கொண்டது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க. ஆட்சியில் வணிகவரித்துறை அமைச்சராக செயல்பட்டவர் கே.சி.வீரமணி. இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் பெயரில் கே.சி.வீரமணிக்கு சொந்தமான 28 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நேற்று அதிகாலை முதல் சோதனை நடத்தினர்.

மேலும், முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்.) பதிவு செய்துள்ளது. அதில், 5 ஆண்டுகளில் வருமானத்திற்கு அதிகமாக 654 சதவீதம் சொத்து சேர்த்துள்ளதாகவும், 2016-ம் ஆண்டு முதல் 2021 வரை கே.சி. வீரமணி 28.78 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து வாங்கியுள்ளதாகவும் எஃப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கே.சி.வீரமணிக்கு சொந்தமான இடங்களில் நடைபெறும் சோதனை உள்நோக்கம் கொண்டது என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். 

இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சோதனை நடப்பதில் உள்நோக்கம் உள்ளது. அ.தி.மு.க.வினர் தேர்தல் பணிகளில் ஈடுபடக் கூடாது என்பதற்காகவே இந்த சோதனை நடத்தப்படுகிறது. லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை திசைதிருப்ப தி.மு.க. அரசு சோதனை நடத்துகிறது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 26.10.2021 காற்று மணியின் ஓசைகளை கேட்டு குஷியான நாய்...! முதலையை தோளில் போட்டு குத்தாட்டம் | சிலிர்க்க வைக்கும் வீடியோ வைரல்...!
பார்வையாளர்ளை வியப்பில் ஆழ்த்திய பாம்பு நடனம்...! ஆமையின் கண்ணீரை பருகும் வண்ணத்துப்பூச்சிகள்...! ஒரே நாளில் தலையில் உள்ள பேனை விரட்ட எளிய டிப்ஸ்| How To Get Rid Of Head Lice Completely,
நெற்றியில் ஒற்றை கண்ணுடன் பிறந்த ஆட்டுக்குட்டி...! இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 25.10.2021 இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 24.10.2021
ஹோம் வொர்க் பண்ணினா பூனைக்கு பிடிக்காது சிறுவனை டிஸ்டர்ப் செய்யும் வீடியோ வைரல்....! கீழே கிடக்கும் குப்பையை எடுத்து குப்பை தொட்டியில் போடும் யானை... Vaara Rasi Palan - 25.10.2021 to 31.10.2021 | Weekly rasi palan Tamil | வார ராசிபலன்
View all comments

வாசகர் கருத்து