முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா 2-வது அலை உயிரிழப்பு : 4 லட்சம் அல்ல 43 லட்சம் இருக்கும் மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

வெள்ளிக்கிழமை, 17 செப்டம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : கொரோனா 2-வது அலையில் உயிரிழப்பு எண்ணிக்கையை மத்திய அரசு குறைத்து காட்டியுள்ளது என காங்கிரஸ் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது. 

நாட்டில் கொரோனா 2-வது அலையில் முதல் அலையை விட அதிக அளவிலான பாதிப்புகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டன. நாள்தோறும் பதிவாகும் பாதிப்பு எண்ணிக்கை லட்சக்கணக்கில் உயர்ந்து, 4 லட்சம் வரை சென்று அதிர்ச்சி ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், கொரோனா மேலாண்மையில் பல முறைகேடுகள் நடந்துள்ளன என காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது. இதுபற்றி அக்கட்சியின் செய்தி தொடர்பு நிர்வாகி அஜய் மேக்கன் கூறும்போது, கொரோனா 2-வது அலையில் உயிரிழப்பு எண்ணிக்கையை மத்திய அரசு குறைத்து காட்டியுள்ளது. 

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) ஆனது கொரோனா தொடர்புடைய உயிரிழப்புகளை குறைத்து காட்டியுள்ளது. கொரோனா மேலாண்மை முறைகேடுகளை, ஐ.சி.எம்.ஆர். அமைப்பில் பணியாற்றும் மூத்த விஞ்ஞானிகள் சுட்டி காட்டியுள்ளனர். 

அரசு தகவலின்படி, 4,43,497 பேர் உயிரிழந்து உள்ளனர். ஆனால், இது தவறு. உண்மையில் உயிரிழப்பு எண்ணிக்கை 43 லட்சம் இருக்கும். அல்லது அதிக அளவாக 68 லட்சம் இருக்கும் என அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து