கின்னஸ் சாதனை படைத்த நீளமான காதுடைய 'நாய்'

Ear 2021 09 28

Source: provided

அமெரிக்காவைச் சேர்ந்த நாய்க்கு மிக நீளமான காது இருப்பதால், கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. பெய்ஜ் ஓல்சன் என்ற பெண் வளர்த்து வரும் லூ எனப் பெயரிடப்பட்ட நாய்க்கு மூன்று வயதாகிறது. லூவின் காது 12புள்ளி 38 இன்ச் நீளம் கொண்டதாக உள்ளது. 

உலகிலேயே மிக நீளமான காது கொண்டிருப்பதால், கின்னஸ் சாதனை புத்தகத்தில் லூ இடம் பிடித்துள்ளது. இதனால், ஏராளமானோர் லூவின் காதை ஆர்வமுடன் தொட்டுச் செல்கின்றனர்.

______________

மகளிர் வாகன ஓட்டுநர் பயிற்சி பள்ளி மூடல்

ஆப்கானிஸ்தானில் திறக்கப்பட்ட மகளிருக்கான முதல் வாகன ஓட்டுநர் பயிற்சி பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டது. காபூலில் நிலாப் துராணி என்ற பெண் சில ஆண்டுகளாக மகளிர் ஓட்டுநர் பயிற்சி பள்ளி நடத்தி வந்துள்ளார். 

ஆனால் ஆப்கானிஸ்தான் தலிபான்கள் கட்டுப்பாட்டின் கீழ் வந்ததையடுத்து காட்சிகள் மாறியுள்ளன. அந்த வகையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் ஒருவர் கூட பயிற்சி பெற வரவில்லை என நிலாப் கூறுகிறார். மேலும் தனக்கும் மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாக கூறிய அவர் தற்போது தற்காலிகமாக மூடுவதாக அறிவித்தார்.

___________

முற்றிலும் சிதையும் நிலையில் ஆப்கான் வங்கி கட்டமைப்பு

ஆப்கானிஸ்தான் வங்கி கட்டமைப்பே கிட்டத்தட்ட சிதையும் நிலையில் உள்ளது என்று அந்த நாட்டின் மிகப்பெரிய வங்கி ஒன்றின் தலைவர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய வங்கியின் தலைமை செயல் அதிகாரி சையது மூசா கலீம் அல்-ஃபலாகி வாடிக்கையாளர்கள் இடையே நிலவும் அச்ச உணர்வு காரணமாக ஆப்கானிஸ்தானின் நீதித்துறையை இருப்புக்காக போராட வேண்டிய நெருக்கடியில் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

காபூலில் தற்போது நிலவும் குழப்பமான சூழ்நிலை காரணமாக அவர் தற்போது துபாயில் இருக்கிறார். வங்கிகளில் பணத்தை சேமித்து வைத்துள்ளவர்கள் பெருமளவில் தற்போது பணத்தை திரும்ப எடுத்து வருகிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது ஆப்கானிஸ்தானில் உள்ள வங்கிகளில் பணத்தை திரும்ப எடுப்பது மட்டுமே நடக்கிறது என்றும் பிற வங்கி சேவைகள் எதுவும் நிகழவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானின் ஆட்சியை தாலிபன்கள் கைப்பற்றிய ஆகஸ்ட் மாதத்திற்கு முன்பே அந்நாடு ஏற்கனவே பொருளாதார நெருக்கடியை எதிர் கொண்டு இருந்தது,

----------------

சுவீடன் குடியிருப்பில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு - 20 பேர் காயம்

சுவீடன் நாட்டின் தென்மேற்கு நகரான கோத்தன்பர்க்கில் குடியிருப்பு கட்டிடம் ஒன்று உள்ளது. இதில் நேற்று அதிகாலை 5 மணியளவில் திடீரென குண்டுவெடிப்பு நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் 20 முதல் 25 பேர் வரை காயமடைந்துள்ளனர்.  3 பேர் வரை பலத்த காயமடைந்து உள்ளனர்.  

அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். குண்டுவெடிப்பினை தொடர்ந்து பல்வேறு கட்டிடங்களுக்கும் தீ பரவியுள்ளது.  இதனை தொடர்ந்து 100 முதல் 200 பேர் வரை அந்த கட்டிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

____________

ஜப்பானில் தனிமைப்படுத்தும் காலம் 10 நாட்களாக குறைப்பு

xஜப்பானில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களை 14 நாட்கள் வரை தனிமைப்படுத்துவது என அரசு முடிவு செய்து அமல்படுத்தியிருந்தது.  இவற்றில் இந்தியா உள்பட அதிக ஆபத்துள்ள 40 நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு 3 நாட்கள் அரசுக்குரிய இடங்களில் தங்க வைப்பது உள்பட மொத்தம் தனிமைப்படுத்தும் காலம் 14 நாட்கள் ஆகும்.  இந்த நிலையில், நாட்களின் எண்ணிக்கையை அரசு குறைத்து உள்ளது.

இதுபற்றி அந்நாட்டின் தலைமை அமைச்சரவை செயலாளர் கத்சுனோபு கட்டோ கூறும்போது, வருகிற அக்டோபர் 1ந்தேதியில் இருந்து, கொரோனா பாதிப்புக்கு தனிமைப்படுத்தும் காலம் 14 நாட்களில் இருந்து 10 நாட்களாக குறைக்கப்பட உள்ளது என கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து