முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று பெளர்ணமி கிரிவலம் ரத்து : திருப்பரங்குன்றம் மலையில் நாளை மகாதீபம் ஏற்றப்படுகிறது

புதன்கிழமை, 17 நவம்பர் 2021      ஆன்மிகம்
Image Unavailable

Source: provided

மதுரை : திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின்முக்கிய நிகழ்ச்சியாக இன்று (வியாழக்கிழமை) இரவு 7.45 மணி முதல் 8.15 மணி வரை கோவிலுக்குள் உள்ள திருவாச்சி மண்டபத்தில் முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. 

இந்த நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இதனால் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோவிலின் பிரதான நுழைவாயில் செல்லுவதற்கு அனுமதி இல்லை. இதேசமயம் கோவிலின் வலதுபுறம் உள்ள தீர்த்தக்குளம் வழியாக பக்தர்கள் சென்று கருவறையில் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். பட்டாபிஷேக நிகழ்ச்சி முடிந்த பின்னர் இரவு 9 மணிக்கு நடை சாத்தப்படும்.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு மலையில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதனையொட்டி காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு மாலை 4 மணி வரை பிரதான கோவிலின் நுழைவுவாயில் வழியாக பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மாலை 4 மணியில் இருந்து இரவு 8 மணி வரை திருக்குளம் சந்து வழியாக கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். மலையில் உள்ள உச்சி பிள்ளையார் கோவில் வளாகத்தில் மாலை 6 மணியளவில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது

இந்தநிகழ்ச்சியில் பக்தர்கள், பொதுமக்கள் மற்றும் உபயதாரர்கள் மலைமீது செல்ல அனுமதி இல்லை. வெளியூர் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோவில் வளாகத்தில் மற்றும் கோவில் கல்யாண மண்டபம் வளாகத்திலோ தங்குவதற்கு அனுமதி இல்லை என்று கோவில் துணை கமிஷனர் (பொறுப்பு) ராமசாமி தெரிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் 18-ந் தேதி பவுணர்மி கிரிவலம் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் கிரிவலம் வருவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து