முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீரர்கள் மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி சாப்பிட தடையா ? பி.சி.சி.ஐ. விளக்கம்

புதன்கிழமை, 24 நவம்பர் 2021      விளையாட்டு
Image Unavailable

இந்திய கிரிக்கெட் வாரியம் வீரர்களுக்கு உணவு கட்டுப்பாடு விதித்துள்ளது என்ற செய்தி வெளியான நிலையில், பி.சி.சி.ஐ. விளக்கம் அளித்துள்ளது.

சாப்பிடக்கூடாது...

இந்திய கிரிக்கெட் வீரர் களுக்கான உணவு பட்டியல் கிரிக்கெட் வாரியம் சார்பில் வெளியாகி உள்ளது. இதில் வழக்கமான உணவுகளை தவிர்த்து சில முக்கிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதாகவும் வீரர்கள் மாட்டிறைச்சி, பன்றி இறைச்சியை எந்த வடிவத்திலும் சாப்பிடக்கூடாது, அவைகள் அவர்களது உணவு பட்டியலில் வரக்கூடாது என்றும், வீரர்களுக்கு வழங்கப்படும் இறைச்சி உணவுகள் அனைத்தும் ஹலால் செய்யப்பட்டவைகளாக இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

யோ-யோ பரிசோதனை...

இந்திய வீரர்களுக்கு உடல் தகுதி மிக முக்கியமாக கருதப்படுவதால் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. யோ-யோ பரிசோதனைக்கு செல்லும் வீரர்கள் மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி சாப்பிடும்போது தேவையற்ற சதை பிடிப்புகளால் பயிற்சியில் தோல்வி அடையலாம் என்பதால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. இது சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. வீரர்களின் உணவு உரிமை தனிப்பட்டதாகும். இதில் கிரிக்கெட் வாரியம் தலையிடுவது சரியா? என்று பலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.

விதிக்கவில்லை... 

இந்தநிலையில் இந்திய வீரர்களுக்கு உணவு கட்டுப்பாடு எதுவும் விதிக்கவில்லை என்று கிரிக்கெட் வாரியம் விளக்கம் அளித்து உள்ளது. இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பொருளாளர் அருண் துமால் கூறியதாவது., இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் எந்த ஒரு வீரர்களுக்கோ அல்லது அணி ஊழியர்களுக்கோ என்ன சாப்பிட வேண்டும், எதை சாப்பிடக்கூடாது என எந்த வழிகாட்டுதலையும் வழங்கவில்லை. இந்த வதந்திகள் அனைத்தும் ஆதாரமற்றவை.

ஆதாரமற்றவை...

இந்த உணவு திட்டம் ஒருபோதும் விவாதிக்கப்படவில்லை. செயல்படுத்தப்பட மாட்டாது. உணவு குறித்து கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தல் வழங்கவில்லை. அவர்கள் தங்கள் சொந்த உணவை தேர்ந்தெடுக்க சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து