முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிங்கப்பூரில் செவிலியருக்கு கடும் தட்டுப்பாடு

வியாழக்கிழமை, 25 நவம்பர் 2021      உலகம்
Image Unavailable

சிங்கப்பூர் மருத்துவமனைகளில் செவிலியருக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்று செவிலியர் பணியமர்த்த உதவுபவர்களுக்கு ரொக்கப் பரிசை அறிவித்துள்ளது.

தேர்ந்த செவிலியர் ஒருவரை குறிப்பிட்ட அந்த தனியார் மருத்துவமனையில் வேலைக்குச் சேர்த்துவிட்டால், சேர்த்துவிடும் நபருக்கு 12,000 சிங்கப்பூர் டாலர் ரொக்கப் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் நிலவும் செவிலியர் தட்டுப்பாடு குறித்து தனியார் மருத்துவமனையில் பெயர் குறிப்பிட விரும்பாத நிர்வாகி ஒருவர் தி ஸ்ட்ரெய்ட் டைம்ஸ் பத்திரிகைக்குப் பேட்டியளித்துள்ளார். அதில் அவர், வெளிநாடுகளில் இருந்து நிறைய செவிலியர்கள் இங்கு வந்து பணிபுரிவது வழக்கம். ஆனால், சிங்கப்பூரில் செவிலியர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்கப்படுவதில்லை என்பதால் அவர்கள் இங்கு ஒன்றிரண்டாண்டுகள் வேலை செய்துவிட்டு அந்த பணி அனுபவத்தைக் கொண்டு கனடா போன்ற நாடுகளுக்குச் சென்றுவிடுகின்றனர் என்றார்.

கடந்த ஆண்டு சிங்கப்பூரில் வரலாறு காணாத அளவுக்கு செவிலியர் பற்றாக்குறை ஏற்பட்டது. தற்போது அது இன்னும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 

சிங்கப்பூரில் இன்னும் கொரோனா தொற்று குறையாத காரணத்தால் அங்கு செவிலியர், மருத்துவர்கள் தேவை அதிகமாகவே உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து