முக்கிய செய்திகள்

தொடரும் கனமழை எதிரொலி: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை?

வெள்ளிக்கிழமை, 26 நவம்பர் 2021      தமிழகம்
Rain 2021 11 02

தமிழகத்தில் கனமழை தொடர்வதால் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக மீண்டும் கனமழை பெய்ய தொடங்கி உள்ளது. குறிப்பாக தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் அதிக கனமழை பெய்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் தொடங்கிய மழை பிற்பகலில் கனமழையாகவும், அதன் பின்னர் அதிகன மழையாகவும் கொட்டித் தீர்த்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளம் போல் தேங்கியது. 

சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் நேற்றும் கனமழை பெய்தது. இன்றும் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழை காரணமாக சென்னை, தூத்துக்குடி, திருவாரூர், புதுக்கோட்டை, நெல்லை, நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து