முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு 12 மினி பஸ்கள் சேவை: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 30 நவம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

சென்னை தலைமைச் செயலகத்தில், சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் 12 இணைப்பு சிற்றுந்துகளின் இயக்கத்தினை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.  

சென்னை பெருநகர மக்களின் போக்குவரத்துத் தேவைகளை நிறைவேற்றுகின்ற வகையில், பொதுப் போக்குவரத்திற்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு திட்டங்களை தமிழக அரசு நிறைவேற்றி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சென்னையில் உள்ள பொதுப் போக்குவரத்துகளின் ஒருங்கிணைந்த இயக்கத்தினை உறுதி செய்யும் வகையில், மெட்ரோ ரயில் பயணிகள் சிரமமின்றி, விரைவாக பயணம் மேற்கொள்ள. தனி வண்ணத்தில் 12 இணைப்பு சிற்றுந்துகள் வாயிலாக தினசரி 148 நடைகள் இயக்கப்படுகின்றன. இதேபோன்று, மற்ற அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலிருந்து மாநகர் போக்குவரத்துக் கழக இணைப்புச் சிற்றுந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் / முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ், போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலாளர்  டாக்டர்.கே.கோபால், மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் அன்பு ஆபிரகாம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து