முக்கிய செய்திகள்

எட்டு ஐ.பி.எல் அணிகளில் தக்கவைக்கப்படாத வீரர்கள்

புதன்கிழமை, 1 டிசம்பர் 2021      விளையாட்டு
IPL-Player-1--2021-12-01

ஐ.பி.எல். 2022 -ம் ஆண்டு சீசனில் ஆடவுள்ள 10 அணிகளில் எட்டு அணிககள் பல வீரர்களை தக்கவைத்துள்ள நிலையில், பல பிரபல வீரர்களை தக்கவைக்க முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது.

இரு அணிகள்...

ஐ.பி.எல் போட்டியில் எதிர்வரும் சீசனுக்கான ஏலம் நெருங்கி வரும் நிலையில், அணிகள் தக்க வைத்துக் கொண்ட வீரா்களின் பட்டியல் நேற்று முன்தினம் வெளியானது. ஐ.பி.எல் போட்டியில் இரு அணிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. அடுத்த வருடம் முதல் லக்னோ, அகமதாபாத் நகரங்களை அடிப்படையாகக் கொண்டு இரு புதிய அணிகள் இணைகின்றன. இதில் லக்னோ அணியை, கொல்கத்தாவைச் சோ்ந்த தொழிலதிபரான சஞ்சீவ் கோயங்காவின் ஆா்.பி.எஸ்.ஜி. குழுமம் ரூ. 7,090 கோடிக்கு வாங்கியுள்ளது. அகமதாபாத் அணியைச் சா்வதேசப் பங்கு முதலீட்டு நிறுவனமான சிவிசி கேபிடல் ரூ. 5,600 கோடிக்குச் சொந்தமாக்கியுள்ளது. ஆா்.பி.எஸ்.ஜி. குழுமம் ஏற்கெனவே கடந்த 2016-17 காலகட்டத்தில் ரைசிங் புணே சூப்பா் ஜெயன்ட் அணி உரிமையாளராக இருந்தது.

4 வீரர்கள் மட்டும்...

ஐ.பி.எல் 2022 போட்டியில் விளையாடும் வீரர்களுக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெறவுள்ளது. இதற்காக வீரர்களைத் தக்கவைக்கும் நேற்று முன்தினம் பட்டியல் வெளியானது.இந்நிலையில் ஏற்கனவே உள்ள 8 அணிகளில் 4 பேரை மட்டும் தக்கவைக்க வேண்டும் என்பதால் பல பிரபல வீரர்களைத் தக்கவைக்க முடியாத நிலை அணிகளுக்கு ஏற்பட்டுள்ளது. 

ரெய்னா - பிராவோ...

2021 ஐ.பி.எல் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 2-ம் இடம் பிடித்த  டு பிளெஸ்சிஸ், பிராவோ, சுரேஷ் ரெய்னா, உத்தப்பா, தீபக் சஹார், ஷர்துல் தாக்குர், ஹேசில்வுட் ஆகிய முக்கிய வீரர்களை சிஎஸ்கே அணியால் தக்கவைக்க முடியவில்லை. இதே நிலை தான் இதர அணிகளுக்கும். இதில் சில வீரர்கள் ஏலத்தில் பங்குபெற விருப்பம் தெரிவித்ததாலும் இந்நிலை ஏற்பட்டுள்ளது.

தக்கவைக்கப்படாத வீரர்கள்:

  • சென்னை:  டு பிளெஸ்சிஸ், பிராவோ, சுரேஷ் ரெய்னா, உத்தப்பா, தீபக் சஹார், ஷர்துல் தாக்குர், ஹேசில்வுட்.
  • கொல்கத்தா: மார்கன், ஷுப்மன் கில், ஃபெர்குசன், நிதிஷ் ராணா.
  • பெங்களூர்: படிக்கல், சஹால், ஹர்ஷல் படேல், வாஷிங்டன் சுந்தர்.
  • தில்லி: ஷ்ரேயஸ் ஐயர், அஸ்வின், அவேஷ் கான், ரபாடா.
  • மும்பை: பாண்டியா, இஷான் கிஷன், டிரெண்ட் போல்ட், ராகுல் சஹார்.
  • ஐதராபாத்: வார்னர், ரஷித் கான், பேர்ஸ்டோ, மனிஷ் பாண்டே.
  • ராஜஸ்தான்: பென் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர், டேவிட் மில்லர், கிறிஸ் மாரிஸ், லியம் லிவிங்ஸ்டன்.
  • பஞ்சாப்: கே.எல். ராகுல், கிறிஸ் கெயில், ரவி பிஷ்னாய், நிகோல்ஸ் பூரன், ஷாருக் கான்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து