முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகை மீதான தாக்குதல்: நடிகர் திலீப் வீட்டில் போலீசார் சோதனை

வியாழக்கிழமை, 13 ஜனவரி 2022      சினிமா
Image Unavailable

நடிகை மீதான தாக்குதல் தொடர்பாக நடிகர் திலீப் வீட்டில் நேற்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் 2017-ல் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த வழக்கில் நடிகர் திலீப், பல்சர் சுனி உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். பல்சர் சுனி இப்போதும் சிறையில் உள்ளார்.

திலீபின் நெருங்கிய நண்பராக இருந்த சினிமா இயக்குநர் பாலசந்திரகுமார் அளித்த பேட்டியை தொடர்ந்து தற்போது இந்த வழக்கு மீண்டும் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.  பாலச்சந்திர குமார் நேற்று முன்தினம் இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார். நடிகை தாக்குதல் வீடியோவை திலீப் தனது வீட்டில் பார்த்ததாக குமார் குற்றம் சாட்டியிருந்தார்.

நடிகை விவகாரம் தொடர்பாக ஆலுவாவில் உள்ள நடிகர் திலீப், அவரது சகோதரர் அனூப் மற்றும் தயாரிப்பு நிறுவனத்தில் நேற்று கேரள காவல்துறையின் குற்றப்பிரிவு அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். திலீப் மீது பதிவு செய்யப்பட்டுள்ள புதிய வழக்கில் அவர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை கேரள ஐகோர்ட்டு விசாரிக்க உள்ளது. எனினும், வெள்ளிக்கிழமை வரை அவரைக் கைது செய்ய மாட்டோம் என்று அரசு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!