எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெல்ஜியத்தில், ரயிலுக்காக காத்திருந்த பெண்ணை, பின்னாலிருந்து ஒருவர் வேண்டுமென்றே தண்டவாளத்தில் தள்ள அப்போது, மிக அருகே வந்து கொண்டிருந்த மெட்ரோ ரயில் ஓட்டுநர், சாமர்த்தியமாக செயல்பட்டு அவசரகால பிரேக்கைப் போட்டு ரயிலை நிறுத்தினார். பெல்ஜியத்தில், பிரஸல்ஸ் நகரின் மெட்ரோ ரயில் நிலையத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது.
அதில், பிரஸல்ஸ் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஏராளமானோர் ரயிலுக்காகக் காத்திருக்கிறார்கள். அப்போது ரயில் நிலைய நடைமேடையில் நின்றிருக்கும் ஒரு பெண்ணை, பின்னாலிருந்து வரும் ஒரு நபர், தண்டவாளத்தை நோக்கி தள்ளி விடுகிறார். எதிர்பாராத இந்த தாக்குதலால் நிலைகுலைந்த அப்பெண், எவ்வித எதிர்ப்போ, தற்காப்பு முயற்சிகளோயின்றி தண்டவாளத்தில் பொத்தென்று விழுகிறார்.
கண்ணிமைக்கும் நேரத்தில், அவளருகே அவர் எதிர்பார்த்துக் காத்து நின்ற மெட்ரோ ரயில் வந்து விட்டது. ஆனால், ரயில் ஓட்டுநரோ, மிகவும் சாமர்த்தியமாக அவசரகால பிரேக்கைப் போட்டு, அந்த இடத்திலேயே ரயிலை நிறுத்துகிறார். நல்லவாய்ப்பாக அந்த பெண்ணுக்கு மிகவும் அருகாமையில் அந்த ரயில் நிறுத்தப்பட்டது. சிலர் உடனடியாக தண்டவாளத்தில் குதித்து அப்பெண்ணை மீட்கிறார்கள். அந்த பெண் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். பெண்ணை தண்டவாளத்தில் தள்ளி விட்டு, ஓடிய நபரை காவல்துறையினர் கண்டுபிடித்து கைது செய்தனர். ஆனால், இந்த கொலை முயற்சிக்கான காரணம் குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


