முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி கோவில் வளாகத்தில் பார்வேட்டை உற்சவம் நிகழ்ச்சி : பஞ்ச ஆயுதங்களுடன் ஏழுமலையான் காட்சி

திங்கட்கிழமை, 17 ஜனவரி 2022      ஆன்மிகம்
Image Unavailable

Source: provided

திருப்பதி : திருப்பதி கோவில் வளாகத்தில் பார்வேட்டை உற்சவம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பஞ்ச ஆயுதங்களுடன் ஏழுமலையான் காட்சி அருளினார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் அன்றும், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் நவராத்திரி பிரம்மோற்சவம் முடிந்த அடுத்த நாளும் ஏழுமலையான் கோவிலில் இருந்து பாபவிநாசம் செல்லும் சாலையில் உள்ள பார்வேட்டை மண்டபத்திற்கு செல்வார். அதன்படி நேற்று முன்தினம் பார்வேட்டை உற்சவம் நடந்தது. கொரோனா பரவல் காரணமாக பார்வேட்டை மண்டபத்திற்கு ஏழுமலையான் செல்லவில்லை.

கோவிலில் உள்ள கல்யாண உற்சவ மண்டபத்தில் சிறிய செயற்கை வாகனம் அமைக்கப்பட்டது. அங்கு ஏழுமலையான் சங்கு, சக்கரம், கத்தி, கதம், வில் உள்ளிட்ட பஞ்ச ஆயுதங்களுடனும், ஸ்ரீகிருஷ்ணர் மற்றொரு பல்லக்கிலும் எழுந்தருளினர். பின்னர் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து அன்னமாச்சார்யாவின் சங்கீத கீர்த்தனை நடைபெற்றது. இதையடுத்து வேட்டையாடும் நிகழ்ச்சி நடந்தது.

அப்போது கோவில் தலைமை அர்ச்சகர் வேணுகோபால் தீட்சிதர் ஈட்டியை ஏந்தியபடி சாமியுடன் செயற்கை வாகனத்தை நோக்கி 3 முறை ஓடிச்சென்று ஈட்டியை எறிந்தார். நிகழ்ச்சியில் கூடுதல் செயல் அலுவலர் தர்மா ரெட்டி மற்றும் அதிகாரிகள் அர்ச்சகர்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து