எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஹைதராபாத் : 8 எழுத்து மந்திரத்தை உலகறிய செய்த வைணவ மகான் ஸ்ரீ இராமானுஜரின் 1000 ஆண்டுகள் நிறைவுற்றதன் நினைவாக, அவருக்கு ஹைதராபாத்தில் உள்ள திரிகண்டி சின்ன ஜீயர் சுவாமிகளின் மடத்தில் 34 ஏக்கர் பரப்பளவில், 216 அடி உயர ஐம்பொன்னாலான ‘சமத்துவ சிலை’ நிறுவப்பட்டுள்ளது.
இதனை வரும் பிப்ரவரி மாதம் 5-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைக்க உள்ளார். இதற்கான இறுதி கட்ட ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
ஆளவந்தாரை தொடர்ந்து வைணவ பீடத்துக்கு தலைமை தாங்கி, அதனை சீரமைத்து ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இன்று வரை வைணவத்தை தழைத்தோங்க செய்த மகான்தான் இராமானுஜர். தனக்கு போதித்த 8 எழுத்து மந்திரத்தை உலகறிய செய்ய கோயில் கோபுரம் மீதேறி அனைவருக்கும் போதித்தவர் இராமானுஜர். வேதத்தை அழகு தமிழில் பாசுரங்களாய் எழுதிய நம்மாழ்வாரின் பெயரை நிலைநாட்டிய இராமானுஜர், தான் வாழும் காலத்தில் மனித இனத்தில் இருந்த தீண்டாமையை ஒழிக்க பிள்ளையார் சுழி போட்ட வைணவ நாயகன். இராமானுஜர் சிறந்த வேதாந்தி மட்டுமின்றி, அவர் ஒரு தலைசிறந்த நிர்வாகியுமாவார். ஒரே சமயத்தில் ஸ்ரீ ரங்கம் கோயிலையும், வைணவத்தையும் நிர்வகித்ததே இதற்கு சான்றாக விளங்குகிறது. தற்கால ஆகம சாஸ்திரத்தை கொண்டு வந்து அனைத்து வைணவ கோயில்களிலும் ஒரே மாதிரியான சடங்குகள், சம்பிரதாயங்கள் என ஒழுங்குமுறைப்படுத்திய மகான் இராமானுஜர். ஸ்ரீ ரங்கம் கோயிலின் உடமைகளை மீட்டெடுத்து நிர்வாகம் செய்ததால் இவரை ரங்கநாதரே ‘உடையவர்’ என அழைத்ததாக ஐதீகம்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இராமானுஜர் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல வைணவ மடங்களை நிறுவினார். ஸ்ரீ ரங்கத்தில் உள்ள தலைமை மடத்துக்கு விதி முறைகளை உருவாக்கினார். தாழ்த்தப்பட்ட இன மக்களை கோயில்களில் அனுமதிக்க வேண்டுமென அறிவித்ததோடு, அவர்களோடு இணைந்து பல சுற்றுப்பயணங்களை மேற்கொண்டார். தாழ்த்தப்பட்ட மக்களை அவர் ‘திருக்குலத்தார்’ என அழைக்கலானார். வட மொழியில் இராமானுஜர் எழுதிய ஸ்ரீ பாஷ்யம் ஒரு சிறந்த புத்தகமாக இன்றும் விளங்குகிறது. இதுபோன்று உலகறிந்த மகானான இராமானுஜருக்கு ஹைதராபாத்தில் முச்சிந்தல் பகுதியில் உள்ள திரிதண்டி சின்ன ஜீயர் சுவாமிகளின் மடத்தில் 34 ஏக்கர் பரப்பளவில், 216 அடி உயரத்தில் பஞ்சலோக சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதில் ராமானுஜருக்கு 120 கிலோ எடையில் தங்கம் சேர்க்கப்பட்டுள்ளது. தாமரை மலர் பீடம் மீது இராமானுஜர் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கும் பிரம்மாண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இது இராமானுஜரின் கோயிலாக விளங்குகிறது. இக்கோயிலுக்குள் இராமானுஜருக்கு 200 கிலோ எடையில் தங்க சிலை கற்ப கிரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
108 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு, நடுவே, யானைகள் தாங்கிப்பிடிக்கும் வகையில் 54 இதழ்களுடன் 27 அடி உயரத்தில் பத்ம பீடம் (தாமரை) 2 அடுக்குகளில் அமைக்கப்பட்டுள்ளது. 2 அடுக்குகளிலும் 18 சங்குகளும், 18 சக்கரங்களும் இடம் பெற்றுள்ளன. இந்த பத்ம பீடத்தின் மீது இராமானுஜருக்கு 108 உயரத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதில் திரிதண்டியின் உயரம் மட்டும் 135 அடியாகும். பத்ரவேதியுடன் இராமானுஜருக்கு மொத்தம் 216 அடி உயரத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இது உலகின் 2வது மிகப்பெரிய சிலையாகும். சர்தார் வல்லபாய் பட்டேல் சிலைக்கு அடுத்தப்படியாக இராமானுஜரின் சிலை உயர்ந்த சிலையாக கருதப்படுகிறது. மேலும் இந்த சிலைக்கு முன் செயற்கை நீர் வீழ்ச்சி தூண் அமைக்கப்பட்டுள்ளது. இதில் யானைகள், அதற்கு மேல் அன்னப்பறவை சிலைகள் அமைக்கப்பட்டு, தாமரை மலர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தாமரை மலரில் இருந்து இராமானுஜரின் சிலை வருவது போல் அமைக்கப்பட்டு, அதற்கு அபிஷேகம் நடப்பது போலவும் உருவாக்கி உள்ளனர். மேலும், இந்த வளாகத்தில் ஆன்மீக நூலகமும், உணவகமும், தியான வளாகமும் அமைக்கப்பட்டுள்ளது. இதனை வரும் பிப்ரவரி மாதம் 5-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி நேரில் கலந்துகொண்டு திறந்து வைக்க உள்ளார். இதற்கான இறுதி கட்ட ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –06-02-2026
06 Feb 2026 -
நெல்லை வடக்குபச்சையாறு அணையில் இன்று முதல் தண்ணீர் திறக்க அரசு உத்தரவு
06 Feb 2026நெல்லை, திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், வடக்குபச்சையாறு அணையில் இருந்து இன்று முதல் பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக தமிழக அரசின் நீர்வ
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
06 Feb 2026சென்னை, தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,040 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,14,000க்கு விற்பனையானது.
-
பாகிஸ்தான்: மசூதியில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதல் 31 பேர் பலி - பலர் படுகாயம்
06 Feb 2026இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் மசூதி ஒன்றில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 31 பேர் உடல் சிதறி பலியானார்கள் மேலும் இதில் பலர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில்
-
மியான்மரில் நிலநடுக்கம்
06 Feb 2026நைப்பியிடா, மியான்மரில் வெள்ளிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.9 ஆகப் பதிவாகியுள்ளது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
-
நேபாளத்தில் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு
06 Feb 2026காத்மாண்டு, நேபாளத்தில் திருமணத்திற்குச் சென்றுகொண்டிருந்த பேருந்து விபத்துக்குள்ளானதில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
-
பாக்.கில் 24 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
06 Feb 2026லூகூர், பாகிஸ்தானின் வடமேற்கு கைபர்-பக்துன்க்வா மாகாணத்தில் இரண்டு தனித்தனி உளவுத்துறை அடிப்படையிலான நடவடிக்கைகளில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் 24 பயங்கரவாதிகள் சுட்
-
தருமபுரி: வாணியாறு அணையில் 55 நாள்களுக்கு நீர் திறக்க உத்தரவு
06 Feb 2026தருமபுரி, தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், வாணியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக தமிழக அரசின் நீர்வளத்துறை வெளியிட்டுள்ள உத்தரவில் கூற
-
த.வெ.க. தேர்தல் அறிக்கை தொடர்பாக மின்னஞ்சலில் பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்க அறிவுறுத்தல்
06 Feb 2026சென்னை, த.வெ.க. தேர்தல் அறிக்கை தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்பதற்கான இணையதளம் முடங்கியதால், பொதுமக்கள் தங்கள் கருத்துகளை மின்னஞ்சல் மூலம் தெரிவிக்க த.வெ.க.
-
'புராஜெக்ட் வால்ட்' திட்டம் மூலம் பாகிஸ்தானில் 13 பில்லியன் டாலர் முதலீடு செய்ய அமெரிக்கா முடிவு
06 Feb 2026நியூயார்க், 'புராஜெக்ட் வால்ட்' என்ற திட்டத்தின் மூலம், பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் உள்ள தங்கம் மற்றும் செம்புச் சுரங்கங்களை மேம்படுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
-
தே.மு.தி.க.வில் விருப்ப மனு விநியோகம் தொடங்கியது
06 Feb 2026சென்னை, 2026 சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.
-
சிங்கப்பூரில் ரூ. 1.9 கோடி மோசடி: இந்திய வம்சாவளிக்கு சிறை
06 Feb 2026சிங்கப்பூர், சிங்கப்பூரில் இளம்பெண்ணை ஏமாற்றி ரூ.
-
பீகார் தேர்தல் முடிவை எதிர்த்த பிரசாந்த் கிஷோர் கட்சி மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
06 Feb 2026பாட்னா, பீகார் தேர்தல் முடிவை எதிர்த்து தாக்கல் செய்த பிரசாந்த் கிஷோர் கட்சியின் மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்து தள்ளுபடி செய்தது.


