முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெங்களூருவில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட 3000 கிலோ குட்கா பறிமுதல்: சிறுவன் உட்பட 6 பேர் கைது

வியாழக்கிழமை, 19 மே 2022      இந்தியா
Gutka-in-Bangalore-2022-05-

பெங்களூருவில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட 3000 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக  சிறுவன் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர் சரகத்தில் பல்வேறு இடங்களில் போதைப்பொருட்களான குட்கா, பான் மசாலா அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக, தஞ்சை சரக டி.ஐ.ஜி கயல்விழிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஏடி.எஸ்.பி ஜெயச்சந்திரன் மேற்பார்வையிலான தனிப்படையினர் அமைக்கப்பட்டது. 

இந்நிலையில் நேற்று காலை, தஞ்சாவூர் சீனிவாசபுரம் பகுதியில் தனிப்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவில் இருந்து வந்த சொகுசு கார் ஒன்றை மடக்கி பிடித்து போலீசார் சோதனை செய்தபோது, அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா உள்ளிட்ட பொருட்கள் இருப்பதை கண்டு பிடித்தனர்.

இதையடுத்து காரில் இருந்தவரிடம் நடத்திய விசாரணையில், தஞ்சாவூர் மேலவெளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பிருந்தாவனம் பகுதியில், தனியாருக்கு சொந்தமான ஒரு குடோனில் மூட்டை மூட்டையாக குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, குடோனில் இருந்த சுமார் 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 3000 கிலோ அளவுடைய குட்கா மற்றும் பான் மசாலா உள்ளிட்ட பொருட்களையும், சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக, பெங்களூருவைச் சேர்ந்த பிரவீன் குமார் (வயது21), தஞ்சாவூரை சேர்ந்த பக்காராம்(48), முஹமத் பாருக் (35), பன்னீர்செல்வம்(40), முத்துப்பேட்டையை சேர்ந்த சோழாராம்(41) மற்றும் 15 வயது சிறுவன் உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை தஞ்சாவூர் மேற்கு போலீஸ் நிலையத்தில் தனிப்படை போலீசார் ஒப்படைத்தனர். இது தொடர்பாக, இன்ஸ்பெக்டர் சந்திரா வழக்குப்பதிவு விசாரித்து வருகிறார். பறிமுதல் செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட பொருட்களை டி.ஐ.ஜி கயல்விழி பார்வையிட்டு, தனிப்படை போலீசாருக்கு பாராட்டு தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து