எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அரை சதமடித்து அசத்தினார்.
150 ரன்கள்...
மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற 68-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி, முதலில் பேட்ட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 150 ரன்கள் எடுத்தது. தனி ஆளாகப் போராடிய மொயின் அலி 57 பந்துகளில் 93 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். கேப்டன் தோனி 26 ரன்கள் எடுத்தார்.
151 ரன் இலக்கு..
ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக சஹல், மெக்காய் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். இதையடுத்து, 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் 2 ரன்னில் அவுட்டானார். கேப்டன் சஞ்சு சாம்சன் 15 ரன்னிலும், படிக்கல் 3 ரன்னிலும், ஹெட்மயர் 6 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
கடைசி போட்டி...
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ஜெய்ஸ்வால் பொறுப்புடன் ஆடி அரைசதமடித்தார். அவர் 59 ரன்னில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் அஸ்வின் அதிரடியாக ஆடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இறுதியில், ராஜஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 151 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. அஸ்வின் 40 ரன்னுடன் அவுட்டாகாமல் உள்ளார். தனது கடைசி லீக் போட்டியிலும் தோல்வி அடைந்து சென்னை அணி முழுவதுமாக வெளியேறியது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


