முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடந்த 10 நாட்களில் தமிழகத்தில் கலை கல்லூரிகளில் சேர 3 லட்சம் பேர் விண்ணப்பம்

வெள்ளிக்கிழமை, 1 ஜூலை 2022      தமிழகம்
College-students 2022 07 01

Source: provided

சென்னை : தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியானதும் கல்லூரிகளில் சேருவதற்கு மாணவர்கள் தயாராகி வருகிறார்கள். மாநிலம் முழுவதும் 163 அரசு கலைக்கல்லூரிகள் உள்ளன. இது தவிர தனியார் கலைக் கல்லூரிகளும் உள்ளன.

இந்த கல்லூரிகளில் சேர கடந்த 22-ம் தேதி முதல் மாணவர்கள் விண்ணப்பித்து வருகிறார்கள். தற்போது ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும். அதன்படி இதுவரை 3 லட்சம் பேர் விண்ணப்பித்து இருக்கிறார்கள். 

வழக்கம் போல் இந்த ஆண்டும் கலைக் கல்லூரிகளில் சேருவதற்கு மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். குறிப்பாக போட்டித் தேர்வுகள் எழுதி வேலைவாய்ப்பை பெறுவதற்காக பி.காம் பாட பிரிவை தேர்வு செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.

அரசு கல்லூரிகளை பொறுத்தவரை பொறியியல் மாணவர் சேர்க்கையை போல் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!