எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கருமுட்டை விற்பனை விவகாரம் தொடர்பாக ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற வேண்டுமென்று தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோட்டில் 16 வயது சிறுமியிடம் கருமுட்டை எடுத்து விற்பனை செய்த விவகாரத்தில், ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையின் பதிவை சஸ்பெண்ட் செய்தும், ஸ்கேன் மையங்களுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். இதை எதிர்த்து தனியார் மருத்துவமனை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், "மருத்துவமனை தரப்பில் விளக்கமளிக்க அவகாசம் வழங்கி, விதிமீறல் இருப்பது உறுதி செய்தால் மட்டுமே மருத்துவமனையின் பதிவை சஸ்பெண்ட் செய்ய முடியும் எனவும், பதிவை சஸ்பெண்ட் செய்வதற்கான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை எனக்கூறி, தமிழக அரசின் உத்தரவுகளை ரத்து செய்து" உத்தரவிட்டது.
மேலும் மருத்துவமனை தரப்பில் விளக்கமளிக்க அவகாசம் வழங்கி 12 வாரங்களுக்குள் இறுதி உத்தரவை பிறப்பிக்க உத்தரவிட்ட உயர் நீதிமன்றம்,மருத்துவமனைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றவும் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக மருத்துவ மற்றும் ஊரக சுகாதார பணிகள் இயக்குநர் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மேல் முறையீட்டு வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான, அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், "பொது நலன் கருதி விதிமீறலில் ஈடுபடும் மருத்துவமனையை சீல் வைக்க சட்டத்தில் இடம் உள்ளது. முன்கூட்டியே நோட்டீஸ் அனுப்ப அவசியமில்லை. சிறுமியிடம் ஒன்பது முறை கருமுட்டை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக குற்ற வழக்கும் பதிவு செய்யப்பட்டு 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்" என வாதிட்டார்.
அப்போது மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் , "கடந்த 35 ஆண்டுகளாக எந்த புகாருக்கும் இடமில்லாத வகையில் மருத்துவமனை செயல்பட்டு வந்த நிலையில், பத்திரிகை செய்தி அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சட்டப்படி தங்கள் தரப்பு விளக்கத்தை கேட்க வேண்டியதில்லை என்ற போதும், பதிவை சஸ்பெண்ட் செய்வதற்கான காரணங்களை குறிப்பிட வேண்டும்" என வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், "அரசின் உத்தரவில், விதிகளுக்கு முரணாக செயல்படுவதால் பொதுநலன் கருதி மருத்துவமனையின் பதிவு சஸ்பெண்ட் செய்யப்படுவதாக கூறி அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை எனக்கூற முடியாது.
கருமுட்டை விற்பனை விவகாரத்தில் அபாயகரமான சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே இதனை தனிநீதிபதி புறக்கணித்திருக்க கூடாது எனக் கூறிய நீதிபதிகள், மருத்துவமனைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
இந்தியாவுக்கு வாருங்கள்: வங்கதேசத்தின் புதிய பிரதமருக்கு பிரதமர் நரேந்திரமோடி அழைப்பு
18 Feb 2026புதுடெல்லி, இந்தியாவுக்கு வருகைப்புரியுமாறு வங்கதேசத்தின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள தாரிக் ரஹ்மானுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
-
மெரீனாவில் ரோப் கார் சேவை: சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு
18 Feb 2026சென்னை, சென்னஐ மெரீனாவில் கடற்கரையில் ரோப் கார் சேவை கொண்டுவரப்படும் என்று சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் மேயர் பிரியா அறிவித்துள்ளார்.
-
மத்திய கிழக்கில் பெரும் பரபரப்பு: போர் விமானங்களை குவித்த அமெரிக்கா
18 Feb 2026நியூயார்க், மத்திய கிழக்கில் எஃப்-35, எஃப்-22 ரக போர் விமானங்களை குவித்து ஈரானுக்கு அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ளது.
-
ஆட்சியில் பங்கு குறித்து மாணிக்கம் தாகூர் பேச்சு: காங்., தலைமை மீது தி.மு.க. அதிருப்தி?
18 Feb 2026சென்னை, மாணிக்கம் தாகூர் மீது காங்கிரஸ் தலைமை எந்த நடவடிக்கை எடுக்காததால் தி.மு.க. தலைமை அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்படும் தவக்காலம் உலகம் முழுவதும் துவக்கம்: பல்வேறு ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
18 Feb 2026சென்னை, கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்படும் 40 நாட்கள் தவக்காலம் நேற்று முதல் உலகம் முழுவதும் துவங்கியது.
-
உலகம் முழுவதும் முடங்கிய யூடியூப்!
18 Feb 2026நியூயார்க், உலகம் முழுவதும் பல நாடுகளில் நேற்று யூடியூப் முடங்கியதால் பயனர்கள் அவதியடைந்தனர்.
-
நீதிக்கட்சி வரலாறு உள்ளிட்ட திராவிடக் களஞ்சியத்தின் 7 புத்தகங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
18 Feb 2026சென்னை, நீதிக்கட்சி வரலாறு உள்ளிட்ட தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் சார்பில் திராவிடக் களஞ்சியத்தின் 7 புத்தகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
-
தொடர் சரிவில் தங்கம் விலை: 3 நாட்களில் ரூ.1680 குறைவு
18 Feb 2026சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 குறைந்து ரூ.1,13,840-க்கு விற்பனையானது.
-
அமெரிக்க ராணுவத்தை அழிப்போம்: அதிபர் ட்ரம்ப்புக்கு ஈரான் உச்ச தலைவர் எச்சரிக்கை
18 Feb 2026தெஹ்ரான், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தாங்கள் உலகின் வலிமையான ராணுவப் படையை கொண்டுள்ளோம் என்று தொடர்ந்து கூறி வருகிறார்.
-
திண்டுக்கல் நாம் தமிழர் கட்சி மாநாட்டில் நான் போட்டியிடும் தொகுதியை அறிவிப்பேன்: சீமான்
18 Feb 2026திருச்சி, திருச்சி திண்டுக்கல் ரோடு ஆலம்பட்டி புதூரில் வருகிற 21-ம் தேதி நாம் தமிழர் கட்சியின் மாநாடு நடைபெறுகிறது.
-
ரஷ்யாவுக்கு கடத்தப்பட்ட 2 ஆயிரம் குழந்தைகள் மீட்பு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தகவல்
18 Feb 2026கீவ், குழந்தைகளை திரும்ப கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக 2000 குழந்தைகள் ரஷ்யாவிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
-
டெல்லி ஏ.ஐ. உச்சி மாநாடு பிப்ரவரி 21 வரை நீட்டிப்பு
18 Feb 2026டெல்லி, டெல்லியில் நடைபெறும் ஏ.ஐ. தாக்க உச்சி மாநாடு பிப்.21-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
எப்ஸ்டீன் கோப்புகள் குறித்து பாரபட்சமற்ற விசாரணையை நடத்த ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தல்
18 Feb 2026ஜெனீவா, எப்ஸ்டீன் கோப்புகளில் வெளிவந்துள்ள குற்றச்சாட்டுகள் மனித குலத்துக்கே எதிரானவை என்று ஐ.நா.வின் நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
18 Feb 2026- சுவாமிமலை முருகன் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
- வேதாரண்யம் சிவபெருமான் புறப்பாடு
- நத்தம் மாரியம்மன் பவனி.
-
இன்றைய நாள் எப்படி?
18 Feb 2026



