முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துணை ஜனாதிபதியாக விரும்பினேனா? பா.ஜ.க. புகாருக்கு பீகார் முதல்வர் நிதிஷ் பதிலடி

வியாழக்கிழமை, 11 ஆகஸ்ட் 2022      இந்தியா
nithis--------2022-08--11

Source: provided

பாட்னா: துணை ஜனாதிபதியாக ஆசைப்பட்டதாகவும். அது நிறைவேறாததாலேயே நிதிஷ் குமார் பாஜக கூட்டணியை பிஹாரில் முறித்ததாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார் பாஜக மாநிலத் தலைவர் சுஷில் குமார் மோடி. ஆனால் பதவி ஆசை இல்லாத தன்னை பாஜக பகடி செய்வதாக பதிலடி கொடுத்துள்ளார் நிதிஷ் குமார்.

சுஷில் குமார் மோடியின் விமர்சனம் குறித்து நிதிஷ் குமாரிடம் நேற்று செய்தியாளர்கள் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், "துணை ஜனாதிபதியாக வேண்டும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. பாஜக ஜோக் அடிக்கிறது. ஐக்கிய ஜனதா தள கட்சி ஜனாதிபதி தேர்தல், துணை ஜனாதிபதி தேர்தல் என இரண்டிலும் பாஜகவை ஆதரித்தது. இதைக் கூட மறந்துவிட்டு பேசுகிறார் சுஷில் குமார் மோடி" என்று கூறினார்.

ஆனால் சுஷில் குமார் மோடியோ, "நிதிஷ் குமார் மழுப்புகிறார். துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட நிதிஷ் குமாருக்கு சீட் வாங்கிக் கொடுத்தால் நான் பீகார் முதல்வராகலாம் என்று ஐக்கிய ஜனதா தள கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவர் என்னை நேரில் சந்தித்துப் பேசினார்" என்றார்.

முன்னதாக பீகார் முதல்வராக 8வது முறையாக பதவியேற்றுக் கொண்டார் நிதிஷ் குமார். மாநிலத்தின் துணை முதல்வராக லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தேஜஸ்வி யாதவ் பொறுப்பேற்றார். பதவியேற்பு விழாவை பாஜக புறக்கணித்தது. பதவியேற்புக்குப் பின்னர் பேசிய நிதிஷ் குமார், 'நான் 2020 தேர்தலுக்குப் பின்னர் முதல்வராக வேண்டும் என்று கூட விரும்பவில்லை. கட்சியினர் நிர்பந்தத்தினால் முதல்வர் பதவியேற்றேன்" என்று கூறியிருந்தார். தான் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக களமிறங்கவும் விரும்பவில்லை என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், துணை ஜனாதிபதியாக ஆசைப்பட்டதாகவும். அது நிறைவேறாததாலேயே நிதிஷ் குமார் பாஜக கூட்டணியை பிஹாரில் முறித்ததாகவும் பாஜக மாநிலத் தலைவர் சுஷில் குமார் மோடி குற்றஞ்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து