முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சு: அமெரிக்க எம்.பி.க்கள் குழு தைவான் பயணம்

திங்கட்கிழமை, 15 ஆகஸ்ட் 2022      உலகம்
American-MPs 2022-08-15

நான்சி பெலோசியின் வருகையால் ஏற்பட்ட பதற்றத்துக்கு மத்தியில் அமெரிக்க எம்.பி.க்கள் தைவான் பயணம் மேற்கொண்டுள்ளனர். 

தீவு நாடான தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என கூறி சொந்தம் கொண்டாடி வரும் சீனா, தைவானுடன் அமெரிக்கா நட்புறவை பேணுவதை கடுமையாக எதிர்த்து வருகிறது. இந்த சூழலில் சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி கடந்த 2-ம் தேதி தைவானுக்கு சென்றார். இதனால் கோபமடைந்த சீனா தைவானை மிரட்டும் விதமாக தைவானை நாலாபுறமும் சுற்றிவளைத்து ஒரு வார காலமாக போர்ப்பயிற்சியில் ஈடுபட்டது. இதனால் தைவான் - சீனா இடையே போர்ப்பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியது. 

இந்த நிலையில் நான்சி பெலோசி தைவானுக்கு சென்ற 12 நாட்களுக்கு பிறகு அமெரிக்காவின் ஜனநாயக கட்சி எம்.பி. எட் மார்கி தலைமையிலான நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழு நேற்று முன்தினம் தைவான் சென்றது. 5 எம்.பி.க்களை கொண்ட இந்த குழு தைவான் அதிபர் சாய் இங் வென் மற்றும் அரசின் உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து