முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3 போட்டிகள் கொண்ட தொடர் ஆரம்பம்: முதல் ஒருநாள் போட்டியில் இன்று இந்தியா - ஜிம்பாப்வே பலப்பரீட்சை

புதன்கிழமை, 17 ஆகஸ்ட் 2022      விளையாட்டு
India-Zimbabwe 2022-08-17

Source: provided

ஹாராரே : இந்தியா - ஜிம்பாப்வே இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று ஆரம்பமாகிறது. முதல் ஒருநாள் போட்டியில் இன்று இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

3 ஆட்டங்கள்...

இந்திய அணி ஜிம்பாப்வேவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. ஆகஸ்ட் 18-ல் தொடங்கும் ஒருநாள் தொடர் ஆகஸ்ட் 22-ல் நிறைவடைகிறது. சமீபத்தில் வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரை 2-1 எனவும் ஒருநாள் தொடரை 2-1 எனவும் ஜிம்பாப்வே ஜெயித்திருந்தது. 

கே.எல். ராகுல்...

கே.எல். ராகுல் தலைமையிலான இந்திய அணியில் தீபக் ஹூடா இடம்பெற்றுள்ளார். கடந்த பிப்ரவரி முதல் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார் ஹூடா. சமீபத்தில் டி20 ஆட்டத்தில் சதமும் அடித்தார். இதுவரை 5 ஒருநாள், 9 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். இந்த 14 ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

2-வது இடத்தில்... 

சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானது முதல் தொடர்ச்சியாக அதிக வெற்றிகளைப் பெற்ற வீரர்களில் ஹூடா தற்போது 2-வது இடத்தில் உள்ளார். ஜிம்பாப்வேக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் அவர் விளையாடி அந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்று பெற்றுவிட்டால் உலக சாதனையை அவர் சமன் செய்துவிடுவார். ரொமானியாவின் சாத்விக், அதிகபட்சமாக 15 ஆட்டங்களில் இடம்பெற்று தொடர்ச்சியான வெற்றிகளைக் கண்டுள்ளார். 

அணியில் ஹூடா ? 

2-வது ஆட்டத்திலும் இடம்பெற்று வெற்றியில் பங்கேற்றால் புதிய உலக சாதனையை நிகழ்த்துவார் ஹூடா. ஜிம்பாப்வே ஒருநாள் தொடரின் 3 ஆட்டங்களிலும் ஹூடா விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானது முதல் தொடர்ச்சியாக அதிக வெற்றிகள் (ஆடவர் கிரிக்கெட்) 1) 15 - சாத்விக் (ரொமானியா), 2) 14 - தீபக் ஹூடா (இந்தியா), 3) 13 - டேவிட் மில்லர் (தென்னாப்பிரிக்கா).

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து