Idhayam Matrimony

சுகாதாரத்திற்கான மதிப்பீட்டில் தமிழகத்திற்கு மூன்றாம் இடம் ஜனாதிபதியிடம் விருது பெற்றார் அமைச்சர்

ஞாயிற்றுக்கிழமை, 2 அக்டோபர் 2022      இந்தியா
Periyakaruppan 2022-10-02

Source: provided

புது டெல்லி ; தேசிய அளவிலான சுகாதாரத்திற்கான மதிப்பீட்டில் தமிழகம் மூன்றாம் இடம் பிடித்துள்ளது. இதற்கான விருதை ஜனாதிபதியிடம் இருந்து அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் நேற்று பெற்றுக் கொண்டார். 

ஓவ்வொரு ஆண்டும், ஜல்சக்தி அமைச்சகத்தின் குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை மூலம் ஊரக பகுதிகளில் உள்ள சுகாதாரத்தின் தரம் மற்றும் சுகாதார உட்கட்டமைப்பில் அடைந்த முன்னேற்றம் ஆகியவற்றை முக்கிய அளவீடுகளாக கொண்டு இந்தியாவிலுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தரவரிசைப்படுத்தப்படும். அதன் அடிப்படையில், 2021-22ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சுகாதாரத்திற்கான மதிப்பீட்டில், தேசிய அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில் தமிழகம் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. இதற்காக ஜனாதிபதியால் தமிழகத்திற்கு விருது வழங்கப்பட்டது. 

டெல்லியில் நேற்று நடைபெற்ற தூய்மை பாரத விழாவில் தமிழக அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் முதன்மைச் செயலாளர் அமுதா ஆகியோர் ஜனாதிபதியிடம் இருந்து இந்த விருதினை பெற்றுக் கொண்டனர். 

மேலும் தேசிய அளவில், சுஜலாம் 1.0 எனும் 100 நாள் நீர் மேலாண்மை இயக்கத்தில் தமிழகம் ஐந்தாம் இடம் பெற்றுள்ளது. அதற்கான விருதையும் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிதுறையின் முதன்மைச் செயலாளர் அமுதா ஆகியோர் ஜனாதிபதியிடம் இருந்து அதற்கான விருதையும் பெற்றனர். கூடுதலாக தமிழகத்தில் சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்கு இவ்விழாவில் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து