எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கிரிக்கெட் களத்தில் இணைந்து கலக்கிய இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களான சச்சினும், டோனியும் டென்னிஸ் கோர்ட்டில் இணைந்துள்ளனர். அவர்கள் இருவரும் விளம்பர பட படப்பிடிப்புக்காக இணைந்துள்ளதாக தெரிகிறது. இருவரும் கேஷுவல் டி-ஷர்ட் அணிந்து கொண்டு அதில் காட்சி அளிக்கின்றனர். அவர்கள் இருவரும் இணைந்துள்ள இந்தப் படம் சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது. இருவரும் அந்த விளம்பர படக்குழுவினர் சொன்னதை கூர்ந்து கவனித்துள்ளனர்.
இவர்கள் இருவரும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் ஆத்மார்த்தமான அன்பை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இருவருமே டென்னிஸ் விளையாட்டை விரும்புபவர்களும் கூட. அண்மையில் நடந்த அமெரிக்க ஓபன் தொடரின் போட்டியை டோனி நேரில் கண்டு களித்தார். அது மிகவும் அரிது. மறுபக்கம் சச்சினோ விம்பிள்டன் உட்பட இங்கிலாந்தில் நடைபெறும் டென்னிஸ் தொடர்களை மிஸ் செய்யவே மாட்டார்.
_____________
சிறந்த கோல்கீப்பர்களாக 2 - வது
முறை தேர்வான ஸ்ரீஜேஷ், சவிதா
சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் இந்த ஆண்டுக்கான சிறந்த கோல்கீப்பர்களாக இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் பி.ஆர்.ஸ்ரீஜேஷ், மகளிர் ஹாக்கி அணியின் சவிதா பூனியா ஆகியோர் 2-வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கான வாக்கெடுப்பில் ஸ்ரீஜேஷ் 39.9 புள்ளிகள் பெற்றார். பெல்ஜியத்தின் லோயிக்வான் டோரன் 26.3 புள்ளிகளையும், நெதர்லாந்தின் பிர்மின் பிளாக் 23.2 புள்ளிகளையும் பெற்றனர். இந்த தேர்வுக்கான வாக்கெடுப்பு ஹாக்கி வல்லுநர்கள் (40 சதவீதம்), அணிகள் (20 சதவீதம்), ரசிகர்கள் (20 சதவீதம்) மற்றும் ஊடகங்கள் (20 சதவீதம்) மூலம் ஆன்லைனில் அளிக்கப்பட்டன.
சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் சிறந்த கோல்கீப்பர் விருதுக்கு ஸ்ரீஜேஷ் தொடர்ச்சியாக 2-வது முறையாக தேர்வாகி உள்ளார். மகளிர் பிரிவில் சிறந்த கோல்கீப்பராக இந்திய அணியின் சவிதா பூனியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்கான வாக்கெடுப்பில் சவிதா 37.6 புள்ளிகள் பெற்றார். அர்ஜென்டினாவின் பெலன் சுசி 26.4 புள்ளிகளையும், ஆஸ்திரேலியாவின் ஜோஸ்லின் பார்டம் 16 புள்ளிகளையும் பெற்றனர்.
____________
லெஜன்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி:
இந்திய கேப்பிடல்ஸ் அணி சாம்பியன்
ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் பங்கேற்ற லெஜன்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடந்தது. 4 அணிகள் விளையாடிய இத்தொடரின் இறுதி போட்டி ஜெய்ப்பூரில் நடந்தது. இதில் இந்திய கேப்பிடல்ஸ்-பில்வாரா கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இந்திய கேப்பிடல்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 211 ரன் குவித்தது. ரோஸ் டெய்லர் 82 ரன்னும், மிட்செல் ஜான்சன் 62 ரன்னும் எடுத்தனர்.
பின்னர் பில்வாரா கிங்ஸ் அணி 18.2 ஓவரில் 107 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் காம்பீர் தலைமையிலான இந்திய கேப்பிடல்ஸ் அணி 104 ரன் வித்தியாசத்தில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
____________
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து
போட்டி இன்று தொடங்குகிறது
9-வது இந்தியன் சூப்பர் லீக் (2022-23 சீசன்) கால்பந்து இன்று தொடங்குகிறது. சென்னையின் எப்.சி., ஏ.டி.கே. மோகன் பகான், பெங்களூரு எப்.சி., கேரளா பிளாஸ்டர்ஸ், எப்.சி. கோவா, ஐதராபாத், ஜாம்ஷெட்பூர், மும்பை சிட்டி, நார்த் ஈஸ்ட் யுனைடெட், ஒடிசா, ஈஸ்ட் பெங்கால் ஆகிய 11 அணிகள் விளையாடுகின்றன.கொச்சியில் இன்று நடக்கும் தொடக்க ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ்-ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
அடுத்த ஆண்டு பிப்ரவரி 26-ந்தேதி வரை லீக் ஆட்டங்கள் நடக்கிறது. மொத்தம் 110 லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. லீக் சுற்று முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக அரை இறுதிக்கு முன்னேறும். புள்ளி பட்டியலில் 3 முதல் 6-வது இடம் வரை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றில் விளையாடும். இதிலிருந்து மேலும் இரண்டு அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நடக்கும் இப்போட்டி அட்டவணையில் புதிதாக பிளே-ஆப் சுற்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு போட்டியை ரசிகர்கள் நேரில் காண அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
____________
பாலியல் வன்கொடுமை புகார்:
நேபாள கிரிக்கெட் வீரர் கைது
நேபாள அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் லாமிச்சானே நேற்று காலை போலீசாரால் கைது செய்யப்பட்டார். காத்மாண்டு, நேபாள கிரிக்கெட் அணிக்காக விளையாடியவர் சந்தீப் லமிச்சனே. இவர் இதுவரை 30 சர்வதேச ஒரு நாள் மற்றும் 44 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், ஐபிஎல் தொடரில் பங்கேற்ற முதல் நேபாள வீரர் என்ற பெருமையும் பெற்றார்.
கடைசியாக ஜமைக்கா தாளாவாஸ் அணிக்காக கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் சந்தீப் விளையாடினார். இந்த நிலையில் தான் சந்தீப் லாமிச்சானே மீது 17 வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து சந்தீப் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இதனை அடுத்து சந்தீப்க்கு காத்மாண்டு மாவட்ட நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இதனையடுத்து நேபாளம் கிரிக்கெட் வாரியம் சந்தீப் லமிச்சனேவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. சந்தீப் கரபியன் பிரிமியர் லீக் தொடரில் பங்கேற்று நாடு திரும்பப்படும் போது கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
_______________
யு-17 உலகக் கோப்பை கால்பந்து:
இந்திய மகளிர் அணி அறிவிப்பு
17 வயதுக்கு உட்பட்டோருக்கான ஃபிபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடர் வரும் 11-ம் தேதி ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் தொடங்குகிறது. இந்திய மகளிர் அணி தனதுமுதல் லீக் ஆட்டத்தில் 11-ம் தேதி அமெரிக்காவுடன் மோதுகிறது. தொடர்ந்து 14-ம் தேதி மொராக்கோவுடனும், 17-ம் தேதி பிரேசிலுடனும் இந்திய அணி மோத உள்ளது.இந்நிலையில் இந்தத் தொடருக்கான 21 பேர் கொண்ட இந்திய மகளிர் அணியை பயிற்சியாளர் தாமஸ்டென்னர்பி அறிவித்தார்.
அணி விவரம்: கோல்கீப்பர்கள்: மோனாலிஷா தேவி மொய்ராங்தெம், மெலடி சானு கெய்ஷாம், அஞ்சலி முண்டா. டிபன்டர்கள்: அஸ்தம் ஓரான், காஜல், நகேதா, பூர்ணிமா குமாரி, வர்ஷிகா, ஷில்கி தேவி ஹேமம். நடுகளம்: பாபினா தேவி லிஷாம், நிது லிண்டா, ஷைல்ஜா, சுபாங்கி சிங். முன்களம்: அனிதா குமாரி, லிண்டாகோம் செர்டோ, நேஹா, ரெஜியா தேவி லைஷ்ராம், ஷெலியா தேவி லோக்டோங்பாம், கஜோல் ஹூபர்ட் டிசோசா, லாவண்யா உபாத்யாய், சுதா அங்கிதா திர்கி.
_______________
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
உதய்பூரில் இன்று நடக்கும் திருமண நிகழ்வில் பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகை ராஷ்மிகாவை கரம் பிடிக்கிறார்
01 Feb 2026ஐதராபாத், விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா ஜோடி ராஜஸ்தானின் உதய்பூரில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் இன்று திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
01 Feb 2026புதுடெல்லி, சி.பி.ஐ. புலன்விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், கரூர் கூட்ட நெரிசல் வழக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
-
தமிழ்நாட்டில் ஆசிரியர் பணி தகுதிக்கான ‘டெட்’ தேர்வில் 1.50 லட்சம் பேர் தேர்ச்சி
01 Feb 2026சென்னை, பள்ளி ஆசிரியர் பணித் தகுதிக்கான ‘டெட்’ தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதுவரை இல்லாத அளவுக்கு 1.50 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
-
தமிழ்நாட்டிற்கு முக்கிய அறிவிப்புகள் இல்லை: பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. எம்.பி.,க்கள் கடும் முழக்கம்
01 Feb 2026புதுடெல்லி, பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு முக்கிய அறிவிப்புகள் எதுவும் இல்லை என தி.மு.க. எம்.பி.,க்கள் முழக்கமிட்டனர்.
-
மத்திய பட்ஜெட் 2047-ல் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை எட்டும் வகையில் உள்ளது: பிரதமர் நரேந்திரமோடி புகழாரம்
01 Feb 2026புதுடெல்லி, தொலைநோக்குடன், நாட்டின் வளர்ச்சிக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள பிரதமர் மோடி, 2047-ல் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை எட்டும் வகையில
-
மத்திய பட்ஜெட்டில் எஸ்.டி.டி.யை அதிகரித்ததால் பங்குச்சந்தைகள் திடீர் வீழ்ச்சி
01 Feb 2026புதுடெல்லி, மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எஸ்.டி.டி.
-
தைப்பூசத் திருநாள்: இ.பி.எஸ். வாழ்த்து
01 Feb 2026சென்னை, தைப்பூசத் திருநாள் வினைகள் விலகி வெற்றிகள் மலரும் நாள் என எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
ஜனவரி மாதம் ஜி.எஸ்.டி வரி வசூல் ரூ.1.93 லட்சம் கோடி..!
01 Feb 2026புதுடெல்லி, கடந்த ஜனவரி மாதத்தில் ஜி.எஸ்.டி வரி வசூல்(சரக்கு மற்றும் சேவை வரி) ரூ.1.93 லட்சம் கோடியை தாண்டியது.
-
வரும் 2026 - 27ஆம் நிதியாண்டில் மத்திய அரசு ரூ.17.2 லட்சம் கோடி கடன் வாங்க முடிவு: பட்ஜெட்டில் அறிவிப்பு
01 Feb 2026டெல்லி, வரும் 2026 - 27ஆம் நிதியாண்டில் மத்திய அரசு ரூ.1.27 லட்சம் கோடி கடன் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய பட்ஜெட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
முன்னாள் முதல்வர் ஓமந்தூராருக்கு திருவுருவச் சிலை அமைக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
01 Feb 2026சென்னை, சென்னை ஓமந்தூரார் மருத்துவக்கல்வி வளாகத்தில் முன்னாள் முதல்வர் ஓமந்தூராருக்குத் திருவுருவச் சிலை அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா: தைப்பூசத்திற்கு தமிழில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திரமோடி
01 Feb 2026புதுடெல்லி, வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்று தைப்பூசத்தை முன்னிட்டு தமிழில் பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
சாமானிய மக்களுக்கு எதுவும் இல்லை: மத்திய பட்ஜெட் குறித்து மம்தா கருத்து
01 Feb 2026டெல்லி, 2026-27 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் மக்களுக்கு விரோதமான பட்ஜெட் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எச்.ராஜாவை நேரில் சென்று நலம் விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்
01 Feb 2026சென்னை, பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா உடல்நலம் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று விசாரித்தார்.
-
திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு வள்ளலார் பெயர் சூட்டப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
01 Feb 2026சென்னை, திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு வள்ளலார் பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
மத்திய பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு ஜனாதிபதியுடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு
01 Feb 2026டெல்லி, 2026 - 27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்பு ஜனாதிபதி திரெளபதி முர்முவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்துப் பேசினார்.
-
லித்தியம் பேட்டரிகளுக்கான இறக்குமதி வரி ரத்து நீட்டிப்பு
01 Feb 2026டெல்லி, மின்சார வாகனங்களை ஊக்குவிக்க லித்தியம் பேட்டரிகளுக்கான இறக்குமதி வரி ரத்து நீட்டிக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மத்திய பட்ஜெட் தாக்கலுக்கு முன் நிதியமைச்சக குழுவினருடன் நிர்மலா சீதாராமன் புகைப்படம்
01 Feb 2026டெல்லி, எதிர்வரும் 2026-27-ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட், பாராளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
-
வார ராசிபலன்
01 Feb 2026


