முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமேஸ்வரத்தில் இருந்து காசிக்கு ஆன்மீக பயணம்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

வெள்ளிக்கிழமை, 18 நவம்பர் 2022      ஆன்மிகம்
Sekarba-babu 2022-09-29

ராமேஸ்வரம், ராமநாதசுவாமி கோயிலிலிருந்து காசி விஸ்வநாதசுவாமி கோயிலுக்கு தமிழகத்தில் உள்ள 20 மண்டலங்களிலிருந்து 200 நபர்கள் கோயில் நிர்வாகத்தின் மூலம் அழைத்துச் செல்லப்படவுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

இராமேஸ்வரம், அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலிலிருந்து காசி அருள்மிகு விஸ்வநாதசுவாமி திருக்கோயிலுக்கு தமிழகத்தில் உள்ள  20 மண்டலங்களிலிருந்து 200 பேர் ஆன்மீகப் பயணம் மேற்கொள்ள இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில் நிர்வாகத்தின் மூலம் அழைத்துச் செல்லப்படவுள்ளதாகவும், தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

2022-2023 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை அறிவிப்பில், இராமேஸ்வரம், அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலிலிருந்து காசி அருள்மிகு விஸ்வநாதசுவாமி திருக்கோயிலுக்கு இவ்வாண்டில்  200 பேர் ஆன்மீகப் பயணம் அழைத்துச் செல்லப்பவர். இதற்கான செலவினத் தொகை ரூ. 50 லட்சத்தை அரசே ஏற்கும் என்று அறிவிக்கப்பட்டது. 

அதன்படி, இந்த ஆன்மீகப் பயணத்திற்கு அழைத்துச் செல்ல இந்து சமய அறநிலையத்துறையின் 20 இணை ஆணையர் மண்டலங்களில், மண்டலத்திற்கு 10 நபர்கள் வீதம் 200 பேரை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பதாரர் இந்து மதத்தை சார்ந்தவராகவும், இறை நம்பிக்கை உடையவராகவும், 60 வயது முதல் 70 வயதிற்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.இதற்கான விண்ணப்ப படிவங்களை சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்திலிருந்து நேரில் பெற்று கொள்ளலாம்.

 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை உரிய இணைப்புகளுடன் மீள அதே மண்டல இணை ஆணையர் அலுவலகத்திற்கு வரும் 15.12.2022- க்குள் அனுப்பி வைக்க வேண்டும். மண்டல இணை ஆணையர்கள் பரிந்துரைக்கும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மட்டுமே ஆன்மிகப் பயணத்திற்கு தேர்வு செய்யப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து