முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.சி.சி. டி-20 பேட்ஸ்மேன் தரவரிசை: சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து முதலிடம்

புதன்கிழமை, 23 நவம்பர் 2022      விளையாட்டு
Suryakumar-1 2022-11-20

Source: provided

துபாய் : டி-20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதல் 10 இடங்களில் இந்திய வீரர்களில் சூர்யகுமார் யாதவ் மட்டுமே உள்ளார். அவர் 890 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

அதிரடி சதம்... 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. கடந்த 2 ஆம் தேதி டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் முதல் முறையாக முதல் இடத்திற்கு முன்னேறி இருந்த சூர்யகுமார் யாதவ் (890 புள்ளிகள்) தற்போது அதை தக்கவைத்துள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் அதிரடி சதம் விளாசி இருந்த சூர்யகுமார் 31 புள்ளிகள் கூடுதலாக பெற்று 890 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார்.

4-வது இடத்துக்கு... 

பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான் 836 புள்ளிகளுடன் இந்த பட்டியலில் தொடர்ந்து 2-வது இடத்தில் நீடிக்கிறார். அதே நேரத்தில் 3-வது இடத்தில் இருந்த பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். நியூசிலாந்தின் டெவோன் கான்வே 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

13-வது இடத்தில்...

டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதல் 10 இடங்களில் இந்திய வீரர்களில் சூர்யகுமார் யாதவ் மட்டுமே உள்ளார். இந்த பட்டியலில் கோலி 13-வது இடத்திலும், லோகேஷ் ராகுல் 19-வது இடத்திலும், ரோகித் சர்மா 21-வது இடத்திலும், இஷான் கிஷன் 33-வது இடத்திலும் ஹர்திக் பாண்டியா 50-வது இடத்திலும் உள்ளனர்.

முதலிடத்தில்...

பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்தியாவின் புவனேஸ்வர் குமார் 11-வது இடத்திற்கும் , அர்ஷ்தீப் 21-வது இடத்திற்கும் முன்னேறியுள்ளனர். இந்த பட்டியலில் இலங்கை வீரர் ஹசரங்கா முதல் இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ரஷித் கான் (ஆப்கானிஸ்தான்) மற்றும் அடில் ரசித் (இங்கிலாந்து) உள்ளனர்.

டி-20 பேட்டிங் தரவரிசை:

1) சூர்யகுமார் யாதவ் - 890 புள்ளிகள்.

2) முகமது ரிஸ்வான் - 836 புள்ளிகள்.

3) டெவோன் கான்வே - 788 புள்ளிகள்.

4) பாபர் ஆசம் - 778 புள்ளிகள்.

5) ஐடன் மார்க்ரம் - 748 புள்ளிகள்.

6) டேவிட் மாலன் - 719 புள்ளிகள்.

6) கிளென் பிலிப்ஸ் - 699 புள்ளிகள்.

7) ரெய்லி ரூஸோ- 693 புள்ளிகள்.

8) ஆரோன் பின்ச் - 680 புள்ளிகள்.

9) பதும் நிசாங்கா- 673 புள்ளிகள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து