முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒப்பந்தமுறை செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய முடியாது அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

வியாழக்கிழமை, 24 நவம்பர் 2022      தமிழகம்
Ma-Subramaniyan 2022-11-24

Source: provided

புதுக்கோட்டை : அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த முறையில் பணிபுரியும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய முடியாது என மாநில மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டையில் நேற்று (நவ.24) ஆட்சியர் கவிதா ராமு தலைமையில், பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் முன்னிலையில் மருத்துவக் கட்டிடங்கள் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில், ஆதனக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.48 லட்சத்தில் கட்டப்பட்ட புறநோயாளிகள் பிரிவு, கொடும்பாளூரில் ரூ.25 லட்சத்தில் கட்டப்பட்ட செவிலியர் குடியிருப்பு மற்றும் கணபதிபுரம், பெருங்களூர், ஆட்டாங்குடி, வாராப்பூர், செட்டியாபட்டி, செம்பட்டிவிடுதி, தேன்கனியூர் ஆகிய இடங்களில் தலா ரூ.20 லட்சத்தில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலையக் கட்டிடத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: தமிழகத்தில் பிரசவத்தின்போது அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை பிறப்பதை தடுப்பதற்காக அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் யோகா, மூச்சுப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் வருங்காலங்களில் குழந்தை பிறப்புக்கான அறுவைச் சிகிச்சை குறையும் என எதிர்பார்க்கிறோம்.

கால்பந்து வீராங்கனை பிரியா மரணத்தில் கவனக்குறைவாக சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களை கைது செய்வது குறித்து காவல் துறை முடிவு எடுக்கும். இதற்கிடையில், மருத்துவர்களின் தவறான சிகிச்சையை மறைப்பதாக அரசு மீது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சுமத்துவது தவறானது.

மருத்துவ தேர்வு வாரியம் மூலம் தேர்வான செவிலியர்களை பணி நிரந்தரம், பணி வரன்முறை செய்யும் பணி படிப்படியாக நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. ஒப்பந்த முறை மற்றும் அவுட் சோர்சிங் முறையில் சேர்ந்துள்ள செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய முடியாது” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து