Idhayam Matrimony

ராகுலின் பாதயாத்திரை இன்று நிறைவு: ஸ்ரீநகரில் பிரம்மாண்ட பொதுக்கூட்ட ஏற்பாடுகள்: 21கட்சிகளுக்கு அழைப்பு

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜனவரி 2023      இந்தியா
Rahul 2023 01 29

Source: provided

புதுடெல்லி : ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதையொட்டி ஸ்ரீநகரில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்ள 21 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடை பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த செப்டம்பர் 7-ம் தேதி அவர் கன்னியாகுமரியில் பாத யாத்திரையை தொடங்கினார். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், அரியானா, டெல்லி, உத்தரபிரதேசம், பஞ்சாப், இமாச்சலபிரதேசம் ஆகிய 13 மாநிலங்களில் நடை பயணம் செய்த பிறகு ராகுல்காந்தி கடந்த 19-ம் தேதி காஷ்மீர் சென்று அடைந்தார். அவரது நடைபயணத்தின் போது ஏராளமானவர்கள் உடன் சென்றனர். 

சோனியாகாந்தி, பிரியங்கா மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் நடைபயணத்தின் போது உடன் சென்றனர். முக்கிய பிரமுகர்களும் அவருடன் சென்று தங்களது ஆதரவை வெளிப்படுத்தி இருந்தனர். ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் ராகுல்காந்தியின் பாதுகாப்பில் குளறுபடி இருந்ததாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது. 

இதைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை நடைபயணத்தை தற்காலிகமாக நிறுத்தினார். பாதுகாப்பில் குளறுபடி இருந்ததாக காங்கிரஸ் கூறிய குற்றச்சாட்டை காஷ்மீர் போலீசார் மறுத்து இருந்தனர். பாதுகாப்பில் எந்த குளறுபடியும் இல்லை என்று தெரிவித்தது. தற்காலிகமாக நிறுத்தப்பட்ட ராகுல்காந்தியின் பாத யாத்திரை புல்வாமா மாவட்டம் அவந்தி போராவில் நேற்று முன்தினம் மீண்டும் தொடங்கியது. 

ராகுல்காந்தியுடன் மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெகபூபா முப்தி, அவரது மகள் இல்டிஜா முப்தி மற்றும் கட்சி தொண்டர்கள் ஏராமானோர் பங்கேற்றனர். ராகுலின் சகோதரியும், காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா லேத்போரா பகுதியில் நடைபயணத்தில் இணைந்தார். 

நேற்று முன்தினம் ராகுல்காந்தியை சுற்றி 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. நடைப்பயணம் தொடங்கிய இடத்துக்கு செல்லும் சாலைகள் அனைத்தும் மூடப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். புல்வாமாவில் கடந்த 2019-ல் தீவிரவாத தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் 40 பேர் பலியான இடத்தில் ராகுல்காந்தி அஞ்சலி செலுத்தினார். பின்னர் ஸ்ரீநகரை நோக்கி அவர் நடைபயணத்தை தொடர்ந்தார். 

இந்த நிலையில் ராகுல்காந்தியின் பாத யாத்திரை இன்றுடன் நிறைவு பெறுகிறது. ஸ்ரீநகரின் எம்.ஏ. சாலையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து அவர் நடைபயணத்தை நிறைவு செய்கிறார். அதன் பின்னர் எஸ்.கே.மைதானத்தில் பொதுக்கூட்டம் நடக்கிறது. ராகுல்காந்தியின் பாத யாத்திரை நிறைவு விழாவை மிகவும் பிரமாண்டமாக நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதற்காக அந்த கட்சி பல்வேறு ஏற்பாடுகளையும் செய்துள்ளது. 

ஸ்ரீநகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்குமாறு 21 எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. தி.மு.க., தேசியவாத காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், கேரளா காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய 12 எதிர்க்கட்சிகள் ராகுல்காந்தியின் நடை பயண நிறைவு விழாவில் பங்கேற்கின்றன. 

திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, தெலுங்கு தேசம் உள்ளிட்ட 9 எதிர்க்கட்சிகள் விழாவில் கலந்து கொள்ளவில்லை. சில எதிர்க்கட்சிகள் பாதுகாப்பு காரணங்களுக்காக புறக்கணிக்கின்றன. ராகுல் காந்தியின் பாத யாத்திரை நிறைவு குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், 

இன்று ஸ்ரீநகரில் நடைபெறும் விழாவிலும், பாத யாத்திரையிலும் பெரும் கூட்டம் சேரும் என்று எதிர்பார்க்கிறோம். நிறைவு விழாவின் போது காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்கள் பலர் கலந்து கொள்கிறார்கள் என்று கூறினார். 

ராகுல் காந்தி 12 மாநிலம் மற்றும் 2 யூனியன் பிரதேசத்தில் 145 நாட்கள் மொத்தம் 3,970 கிலோ மீட்டர் நடைபயணத்தை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து