முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பூமிக்கு அருகே நெருங்கி வரும் அரிய வால் நட்சத்திரம்

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜனவரி 2023      உலகம்
Green comet 2023 01 29

Source: provided

கலிபோர்னியா ; 50,000 ஆண்டுகளில் முதன்முறையாக பூமியை நெருங்கும் ஒரு பச்சை நிற வால் நட்சத்திரத்தை வானியலாளர்கள் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர். 

இந்த நீண்டகால வால்மீன் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மவுண்டுபலோமேரில் சுவிக்கிடிரான்சியன்ட் பெசிலிட்டி மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் காலம் 50 ஆயிரம் ஆண்டுகள் ஆகும். 

அதன் பிறகு தற்போது இந்த வால்மீன் பூமி சுற்றுவட்ட பாதையில் வருகின்றது. கடந்த டிசம்பர் 2022-ம் ஆண்டு முதல் பிரகாசமாக தொடரும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி ஜனவரி மாதத்தில் மிகவும் அருகில் நெருங்கி வருகின்றது. இந்த வால்மீனை வெறும் கண்ணால் பார்க்கலாம். 

கடந்த 12-ம் தேதி சூரியனில் இருந்து பெரிகோலினை கடந்து பூமி வட்டபாதையில் செல்லும் வால் நட்சத்திரம் பிப்ரவரி 1-ம் தேதி பூமிக்கு அருகே நெருங்கி வரும். 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு இந்த நிகழ்வு நடைபெறுகிறது. 

நாசாவின் கூற்றுப்படி, வடக்கு அரைக்கோளத்தில், பச்சை வால் நட்சத்திரம் ஜனவரி பிற்பகுதியில் விடியற்காலையில் தென்படும். வடக்கு அரைக்கோளத்தில் உள்ள வால் நட்சத்திரத்தை பார்ப்பதற்கான கடைசி சிறந்த வாய்ப்பு இன்று 30-ம் தேதியாகும். 

அப்போது போலரிஸ், நார்த் ஸ்டாரின் முடிவிற்கு இடையில் தெரியும். பின்னர் பிப்ரவரி தொடக்கத்தில், வால்மீன் தெற்கு அரைக்கோளத்தில் தெரியும் என்று நாசா தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து