எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஆர்.ஜெ. பாலாஜி முதல் முறையாக கேலி கிண்டல், இல்லாமல் மிக சீரியஸாக நடித்துள்ள திரில்லர் படம் ரன் பேபி ரன். ஜியன் கிருஷ்ணகுமார் இயக்கியுள்ள இப்படத்தை பிரின்ஸ் பிக்ச்சர் தயாரித்துள்ளது. கதை, வங்கி ஒன்றில் பணியாற்றும் ஆர். ஜே பாலாஜியின் காரில், ஐஸ்வர்யா ராஜேஷ் ஏறுகிறாள். இருவரும் வீட்டில் தனித்தனியாக தங்கி இருக்கும் போது ஐஸ்வர்யா பாத்ரூமில் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். பிணத்தை அப்புறப்படுத்த ஒரு பெட்டியில் அடைத்து செஞ்சியை நோக்கி பயணம் செய்கிறார் பாலாஜி. போலீஸ் கெடுபிடியால் பெட்டியை பயணம் செய்த வேனிலேயே வைத்து விட்டு செல்கிறார். வேன் டிரைவர் அந்த பிணத்தை கைப்பற்றி எரித்து விடுகிறார். போலீஸ் நெருங்கி வரும் போது டிரைவர் தற்கொலை செய்து கொள்கிறார். இதெல்லாம் ஏன் நடக்கிறது, கொலை செய்யபட்ட பெண் யார் என ஆராய்கிறார் பாலாஜி. பல திருப்பங்கள், ட்விஸ்ட் என நகர்கிறது படம். பர பரப்பான கிரைம் நாவல் படிப்பதை போன்ற உணர்வை தருகிறது படம். படத்தின் முதல் பாதி மிகுந்த பரபரப்புடன் நகர்கிறது. இரண்டாவது பாதியில் இது குறைவுதான். பிணத்தை பெட்டியில் வைத்து கொண்டு தவிக்கும் தவிப்பில் நன்றாக நடித்துள்ளார் பாலாஜி.. ஐஸ்வர்யா ராஜேஷ் சில காட்சிகள் வந்தாலும் மனதில் நிற்கிறார். ஜோ மல்லூரி என்ற சிறந்த நடிகரை இப்படம் அடையாளம் காட்டி உள்ளது என்று சொல்லலாம். சாம் சி. எஸ் இசை பல காட்சிகளில் நம்மை பயமுறுத்துகிறது. யுவா வின் ஒளிப்பதிவும் மதனின் எடிட்டிங்கும் இணைந்து படத்தை ஒரு சிறந்த தரத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


