முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தருமபுரியிம் மீண்டும் ஒரு சம்பவம்: மின்சாரம் தாக்கி யானை உயிரிழப்பு

சனிக்கிழமை, 18 மார்ச் 2023      தமிழகம்
Elephant 2023 03 18

Source: provided

தருமபுரி : தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டம் கெலவள்ளி அருகே உயர் அழுத்த மின் பாதையை தொட்ட ஆண் யானை உயிரிழந்தது.

பாலக்கோடு வனச் சரகம் பிக்கிலி கிராம பகுதியில் கடந்த சில நாட்களாக ஆண் யானை ஒன்று விளை நிலங்களில் நடமாடி வந்தது. இந்த யானையை வனத்துக்குள் இடம் பெயரச் செய்யும் முயற்சியில் வனத்துறை பணியாளர்கள் ஈடுபட்டு வந்தனர். நேற்று முன்தினம் (மார்ச் 17) இரவு இந்த யானை பாப்பாரப்பட்டி, காரிமங்கலம் பகுதி வழியாக கம்பைநல்லூர் பகுதிக்கு சென்றுள்ளது. வனத்துறையினரும் யானையை பின்தொடர்ந்து சென்றுள்ளனர். 

இந்நிலையில், நேற்று (மார்ச் 18) காலை கம்பைநல்லூர் அடுத்த கெலவள்ளி அருகேயுள்ள வி.பள்ளிப்பட்டு பகுதியில் ஏரிக்கரையில் ஏற முயன்ற இந்த யானை அப்பகுதியில் சென்ற உயர் அழுத்த மின்பாதையில் மோதியுள்ளது. இதில், யானையின் உடலில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அந்த யானை உயிரிழந்தது.

கடந்த வாரத்தில் பாலக்கோடு அடுத்த மாரண்ட அள்ளி பகுதியில் விளை நிலத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி மூன்று யானைகள் உயிரிழந்தன. இந்த சம்பவம் நடந்த இரண்டு வார இடைவெளியில் மீண்டும் ஒரு யானை மின்சார விபத்தில் உயிரிழந்திருப்பது விலங்கு நல ஆர்வலர்கள் மற்றும் சூழல் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து