முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கண்ணை நம்பாதே விமர்சனம்

திங்கட்கிழமை, 20 மார்ச் 2023      சினிமா
Kanai-nampate-vimarcanam

Source: provided

இரவுக்கு ஆயிரம் கண்கள் என்ற திரில்லர் படத்தின் இயக்குநர் மாறனின் மற்றொரு கிரைம் திரில்லர் படம் தான் கண்ணை நம்பாதே. கதை, கர்ப்பிணி பெண்களுக்கு சுரக்கும் திரவத்தை எடுத்து சட்டவிரோதமான செயலில் ஈடுபடும் ஒரு கும்பலின் அட்டூழியத்தைச் சொல்லும் படமே கண்ணை நம்பாதே. நாயகி ஆத்மிகாவின் ஆலோசனையின் படி அவரது வீட்டில் வாடகைக்கு குடி வருகிறார் காதலன் உதயநிதி. இதனை அறிந்த ஆத்மிகாவின் தந்தை உதயநிதியை வீட்டை விட்டு விரட்டுகிறார். இதனால் பிரசன்னாவுடன் தங்க வேண்டிய நிலை உருவாகிறது. இந்நிலையில், வாகனத்தை தாறுமாறாக ஓட்டும் ஒரு பெண்மணிக்கு உதவப்போக பெரிய பிரச்சனையில் சிக்குகிறார் உதயநிதி. அந்த பிரச்சனை என்ன? அதிலிருந்து எப்படி மீண்டார் என்பதை பரபரப்பான திரைக்கதையாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் மாறன். கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து நடித்திருக்கும் உதயநிதி பாராட்டை பெறுகிறார். கதையின் மைய புள்ளியான பூமிகா அற்புதமான நடிப்பை வழங்கியிருக்கிறார். ஒளிப்பதிவாளரும் இசையமைப்பாளரும் நேர்த்தியான பங்களிப்பை கொடுத்திருக்கிறார்கள். மொத்தத்தில் கண்ணை நம்பாதே ஒரு அருமையான கிரைம் திரில்லர் திரைப்படம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 4 days 12 hours ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 1 month 3 weeks ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 1 month 3 weeks ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து