முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா-அமெரிக்கா இடையே முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தம் : ராஜ்நாத் சிங் கையெழுத்து

வெள்ளிக்கிழமை, 31 அக்டோபர் 2025      இந்தியா
Rajnath-Singh 2024-08-30

Source: provided

டெல்லி : இந்தியா- அமெரிக்கா இடையே 10 ஆண்டுக்கான பாதுகாப்பு ஒப்பந்தத்தை ராஜ்நாத் சிங் கையெழுத்திட்டார்.

மலேசியா கோலாலம்பூரில் 19-வது ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் உச்சி மாநாடு இன்று (1-ந்தேதி) நடக்கிறது. அதற்கு முன்பாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர் பீட் ஹெக்செத் ஆகியோர் கோலாலம்பூரில் சந்தித்து இரு நாடுகளின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்கள்.

இந்த சந்திப்பின்போது அமெரிக்கா- இந்தியா இடையே 10 ஆண்டு பாதுகாப்பு கட்டமைப்பில் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் மற்றும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் கையெழுத்திட்டனர். இது தொடர்பாக பீட் ஹெக் செத் எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-

இந்தியா- அமெரிக்கா இரு நாடுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு தகவல் பகிர்வு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்துதல், பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் தடுப்புக்கான ஒரு மூலக்கல்லாக இந்த கட்டமைப்பு கருதப்படுகிறது. இந்த ஒப்பந்தம் இரு நாடுகளின் படைகளுக்கும் ஒரு முக்கியமான படிக்கல்லாகும். இது பாதுகாப்பு மற்றும் நமது வலுவான கூட்டாண்மைக்கான அமெரிக்காவின் நீண்ட கால உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டு காட்டுகிறது என தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறும் போது,"இந்த கட்டமைப்பில் கையெழுத்திட்டது இந்தியா- அமெரிக்கா உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தை குறிக்கிறது. ஹெக்செத் தலைமையின் கீழ் உறவுகள் மேலும் வலுப்பெறும்" என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து