முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் 26-ம் தேதி கோவளம் கடற்கரையில் படகு போட்டி : அமைச்சர் உதயநிதி தொடங்கி வைக்கிறார்

புதன்கிழமை, 22 மார்ச் 2023      தமிழகம்
Udayanidhi 2021 12 12

Source: provided

சென்னை : முதல்வர் மு.க. ஸ்டாலின் 70-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வரும் 26-ம் தேதி கோவளம் கடற்கரையில் மாபெரும் படகுப்போட்டி நடத்தப்படுகிறது. இதனை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைக்கிறார். 

காஞ்சி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஏற்பாடு செய்துள்ள இந்த படகு போட்டியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட படகுகள் பங்கேற்க உள்ளன. 

இதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து படகுகள் கோவளத்துக்கு கொண்டு வரப்பட்டு பந்தயத்தில் பங்கேற்க உள்ளன. ஞாயிறு மதியம் 3 மணிக்கு நடைபெறும் இந்த படகுப் போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அமைச்சர் உதயநிதி வழங்குகிறார். 

மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ள இந்த படகு போட்டியை கண்டுகளிக்க மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து