முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரெயில்வே பணி நியமனத்தில் முறைகேடு: மத்திய விசாரணை அமைப்புகள் முன் தேஜஸ்வி-மிசா பாரதி ஆஜர்

சனிக்கிழமை, 25 மார்ச் 2023      இந்தியா
Tejaswi-Yadav 2023 03 11

Source: provided

புதுடெல்லி : ரெயில்வே பணி நியமனத்தில் முறைகேடு வழக்கில் மத்திய விசாரணை அமைப்புகளான சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை முன்பு லல்லு பிரசாத் யாதவின் மகனும் பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி மற்றும் லல்லு பிரசாத் யாதவின் மகள் மிசா பாரதியும் ஆஜராகினர்.

பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்டீரிய ஜனதாதள கட்சியின் நிறுவனருமான லாலுபிரசாத் யாதவ் 2004 முதல் 2009 வரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மத்திய ரெயில்வே மந்திரியாக பணியாற்றினார். அப்போது ரெயில்வே பணி நியமனத்தில் முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. பலரிடம் நிலத்தை லஞ்சமாக பெற்றுக் கொண்டு ரெயில்வேயில் வேலை வழங்கியதாக அவர் மீது புகார் கூறப்பட்டது.

இதுதொடர்பாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதேபோல அமலாக்கத்துறையும் விசாரணை நடத்துகிறது. இதைதொடர்ந்து லாலு மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்காக டெல்லியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஆஜராக சம்மன் அனுப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து லாலுபிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரிதேவி, மகள் மிசா பாரதி ஆகியோர் கடந்த 15-ந்தேதி ஆஜரானார்கள். அப்போது அவர்களுக்கு கோர்ட்டு ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில் ரெயில்வே பணிக்கு நிலத்தை லஞ்சமாக பெற்ற வழக்கு தொடர்பாக லல்லுபிரசாத் யாதவின் மகனும், பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் நேற்றஉ ஆஜராக சி.பி.ஐ. சம்மன் அனுப்பி இருந்தது. இதை தொடர்ந்து அவர் நேற்றஉ காலை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராக சென்றார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறும்போது "நாங்கள் எப்போதும் விசாரணை அமைப்புகளுக்கு ஒத்துழைக்கிறோம். ஆனால் தற்போது நாட்டின் நிலைமை என்னவென்றால் போராடுவது மிகவும் கடினமாகிவிட்டது. இதைத் எதிர்த்து போராட முடிவு செய்துள்ளோம். நாங்கள் வெற்றி பெறுவோம்" என்றார்.

சி.பி.ஐ. அலுவலகத்தில் காலை 10.30 மணிக்கு தேஜஸ்வி யாதவ் ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து அவரி டம் சி.பி.ஐ. விசாரணை நடைபெற்றது. அவர் ஏற்கனவே 3 முறை சம்மனுக்கு ஆஜராகாமல் இருந்தார். இதற்கிடையே இதே வழக்கில் லல்லுவின் மகளும், எம்.பி.யுமான மிசா பாரதி நேற்று ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது.

இதை தொடர்ந்து மிசா பாரதி அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று காலை ஆஜரானார். அவரி டம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். விசாரணை தொடர்ந்து நடைபெற்றது. லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வியிடம் சி.பி.ஐ.யும், மகள் மிசா பாரதியிடம் அமலாக்கத் துறையும் டெல்லியில் நேற்று ஒரே நேரத்தில் விசாரணை நடத்தியது. டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து