முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக போக்குவரத்துத்துறை சார்பில் பஸ் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் தமிழக அரசு இன்று பேச்சுவார்த்தை

செவ்வாய்க்கிழமை, 30 மே 2023      தமிழகம்
bus-2022 08 25

Source: provided

சென்னை : தமிழக போக்குவரத்துத்துறை சார்பில் தொழிற்சங்கங்களுக்கு பேச்சுவார்த்தைக்கு இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் மொத்தம் 3,233 மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதன்மூலம் தினமும் 30 லட்சத்துக்கும் அதிகமான பொதுமக்கள் பயணம் செய்கின்றனர். மாநகர பஸ்களில் சாதாரண ஒயிட் போர்டு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்கின்றனர். திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளும் பயண சலுகையை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஒவ்வொரு பணிமனையிலும் 'ஸ்பேர் பார்ட்ஸ்' இல்லாத காரணத்தால் 300-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படாமல் உள்ளதாக தொழிற்சங்கத்தினர் குற்றச்சாட்டு கூறி வருகின்றனர். இதற்கிடையே போக்குவரத்து கழகத்தை மேம்படுத்தும் நடவடிக்கையாக உலக வங்கி நிதி உதவியுடன் இந்த ஆண்டு 500 மின்சார பஸ்களை வாங்க அரசு முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டும் 500 பஸ்கள் வாங்குவதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.

புதிதாக வாங்கப்படும் மாநகர பஸ்களை அரசு-தனியார் பங்களிப்புடன் ஓட்டுவதற்கு சாத்தியக்கூறுகளை போக்குவரத்து துறை ஆராய்ந்து வந்தது. இதற்கு தி.மு.க. தொழிற்சங்கமான தொ.மு.ச., சி.ஐ.டி.யு. உள்பட பல்வேறு சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொழிற்சங்க பிரதிநிதிகளை அழைத்து சமீபத்தில் பேசி இருந்தார்.

அப்போது அவர் போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் சென்னை மாநகர போக்குவரத்தில் தனியார் மயம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறி இருந்தார். மேலும் அரசு வழித்தடங்கள் தனியாருக்கு தாரை வார்க்கப்படாது என்றும் ஊழியர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படமாட்டார்கள் என்றும் கூறி இருந்தார்.

இந்த சூழ்நிலையில் 12 போக்குவரத்து பணிமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் (காண்டிராக்ட்) 400 ஊழியர்கள் நியமிக்க போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்து வருவதாக மாநகர பஸ் டிரைவர்-கண்டக்டர்கள் மத்தியில் நேற்று முன்தினம் தகவல் பரவியது.

இதனால் மாநகர பஸ் டிரைவர்கள் நேற்று முன்தினம் மாலை திடீரென்று ஆங்காங்கே பஸ்களை நிறுத்தி பயணிகளை கீழே இறக்கிவிட்டு போராட்டத்தில் குதித்தனர். பஸ்களையும் பணிமனைக்கு கொண்டு சென்றுவிட்டனர். இதனால் பொதுமக்கள் வீடு திரும்ப முடியாமல் கடும் சிரமம் அடைந்தனர். நடுரோட்டில் பல மணிநேரம் தவித்தனர்.

போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கருக்கு இந்த தகவல் தெரியவந்ததும் அவர் போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக் கொண்டார். எந்த பிரச்சனையாக இருந்தாலும் பேசி தீர்த்து கொள்ளலாம். காண்டிராக்ட் ஊழியர்கள் நியமனம் வாபஸ் பெறப்படுவதாகவும் அறிவித்தார். இதை ஏற்று பஸ் டிரைவர்-கண்டக்டர்கள் மீண்டும் பணிக்கு திரும்பினார்கள். இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்று பஸ் ஊழியர்கள் தொழிற்சங்கத்தினரிடம் வற்புறுத்தி வருகின்றனர்.

இதனால் பஸ் ஊழியர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகளை எடுத்து சொல்லவும், போக்குவரத்து துறையை தனியார் மயமாக்க கூடாது என்பதை பற்றி வலியுறுத்தி பேசவும் தொ.மு.ச. தொழிற்சங்க பொதுச்செயலாளர் சண்முகம் எம்.பி. போக்குவரத்து துறை செயலாளர் பணீந்திர ரெட்டியை இன்று சந்தித்து பேச உள்ளார். அவருடன் தொ.மு.ச. தொழிற்சங்க நிர்வாகிகளும் சென்று சந்திக்கிறார்கள். அதன்பிறகு தலைமைச் செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரையும் சந்தித்து பேச உள்ளனர்.

இதுகுறித்து சண்முகம் எம்.பி. கூறுகையில் போக்குவரத்து துறையில் 'அவுட் சோர்சிங் இல்லை' என்று வாக்குறுதி தரப்பட்டதால் தொழிலாளர்களின் போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டு உள்ளது. இருந்தாலும் போக்குவரத்து கழக தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக இன்று அதிகாரிகளையும், அமைச்சரையும் சந்தித்து பேச உள்ளோம் என்றார். 

எனவே இன்று பேச்சுவார்த்தைக்கு பிறகு 6-ம் தேதி பஸ் ஸ்டிரைக் நடைபெறுமா? இல்லையா? என்பது தெரியவரும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து