முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிபர் ஜோபைடனை சந்தித்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் : உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர உறுதி

சனிக்கிழமை, 10 ஜூன் 2023      உலகம்
Joe-Biden-Rishi 2023 06 10

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் ஜோபைடனை இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர உதவி செய்வதாக இருவரும் உறுதி அளித்தனர்.

 உக்ரைன் - ரஷ்யா போர் கடந்த 15 மாதங்களை தாண்டியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது உலக பொருளாதாரத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே போரை நிறுத்தும் படி பல நாடுகள் வலியுறுத்தின. அதே போல் ரஷ்யாவின் நட்பு நாடான சீனாவும் இந்த போரை நிறுத்த உதவுவதாக உறுதியளித்தன. அதன்படி ரஷ்ய அதிபர் புடினை சந்தித்து சீன அதிபர் ஜி ஜின்பிங் பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும் போர் முடிவுக்கு வந்தபாடில்லை. 

இந்த நிலையில் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் அதிபர் ஜோபைடனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ரிஷிசுனக் பிரதமரான பின்னர் மேற்கொள்ளும் 4-வது சந்திப்பு இதுவாகும். இந்த சந்திப்பின் போது உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர உதவி செய்வதாக இருவரும் உறுதி அளித்தனர். 

இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதம் சப்ளை மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கியதில் இந்த இரு நாடுகளும் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கின்றன. மேலும் உக்ரைன் ராணுவத்தினருக்கு போர்ப் பயிற்சியையும் இவர்கள் அளித்தனர். தற்போது அவர்களே போரை முடிவுக்கு கொண்டு வர உதவி செய்வதாக உறுதி அளித்திருப்பது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து