எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நெல்லை. புரட்டாசி மாத சனிக்கிழமை தினங்களான 23.09.2023, 30.09.2023,07.10.2023 மற்றும் 14.10.2023 ஆகிய நாட்களில் நவதிருப்பதி திருக்கோவில்களுக்கு சென்று வர பக்தர்களின் வசதிக்காக, சிறப்புசேவை பேருந்துகளை இயக்கிட,தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், திருநெல்வேலி மண்டலம் மூலம் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு சேவை பேருந்துகள், புரட்டாசி மாதம் நான்கு சனிக் கிழமைகளிலும், காலை 07.00 மணிக்கு திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு கீழ்கண்ட நவதிருப்பதி திருக்கோவில்களுக்கு சென்று இரவுக்குள் திருநெல்வேலி வந்து சேரும்.
திருவைகுண்டம்,நத்தம்,திருப்புளியங்குடி,இரட்டைத்திருப்பதி(2),பெருங்குளம், தென்திருப்பேரை,திருக்கோளுர்,ஆழ்வார்திருநகரி ஆகிய நவதிருப்பதி திருக் கோவில்களுக்கு பக்தர்கள் எவ்வித சிரமமுன்றி சென்று வர திருநெல்வேலி புதியபேருந்துநிலையத்தில் 14.09.23 முதல் அனைத்து நாட்களிலும் காலை 08.00 மணிமுதல் இரவு 08.00 மணிவரை முன்பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தொடர்புக்கு : 94875 99456, 9976768029) இதற்கானபயணக்கட்டணத் தொகை,நபர் ஒன்றுக்கு ரூ.500/= ஆகும். எனவே பக்தர்களும்,பொதுமக்களும் இந்தஅரியவாய்ப்பினைபயன்படுத்தி பயன் அடையுமாறு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திலி) வ.து., பொதுமேலாளர் சரவணன் தெரிவித்துள்ளார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


