முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் பெட்ரோல் விலை ரூ.331 ஆக உயர்வு: டீசல் விலை ரூ.329

திங்கட்கிழமை, 18 செப்டம்பர் 2023      உலகம்
Pak 2023-09-16

Source: provided

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில்  பெட்ரோல், டீசல் எரிபொருட்களின் விலை வரலாறு காணாத அளவுக்கு கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 331-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் ஒரு லிட்டர் டீசல் ரூ. 329-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆட்சியின் போது அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு அவருடைய ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்நாட்டின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் ஆட்சி பொறுப்பேற்றார். இந்நிலையில் கடந்த மாதம் பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.

இதனிடையே பாகிஸ்தானில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டு பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்நிலையில் தற்காலிக பிரதமராக (காபந்து பிரதமர்) பலூசிஸ்தான் மாகாண எம்.பி. அன்வர் உல் ஹக் ககர் நியமிக்கப்பட்டுள்ளார். 

அந்த நாட்டில் பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருட்களின் விலை மேலும் உயர்த்தப்பட்டுள்ளது. நிதி நிலைமையை சமாளிக்க பெட்ரோல், டீசல் மீதான வரிஉயர்த்தப்பட்டதாக அறிவிக்கப்பட் டுள்ளது. அதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.26-ம், டீசல்லிட்டருக்கு ரூ. 17-ம் உயர்த்தப் பட்டுள்ளது.

ஏற்கெனவே பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 305-க்கு விற்பனையான நிலையில் தற்போது கூடுதல் வரியுடன் சேர்த்து ஒரு லிட்டர் ரூ. 331-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் ஒரு லிட்டர் டீசல் ரூ. 311-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது வரியுடன் சேர்த்து ரூ. 329-க்கு விற்பனை செய்யப்படுகிறது. எரிபொருட்களின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளதால் பாகிஸ்தான் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து