முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வன்முறைக்கு மூளையாக செயல்பட்டதாக இம்ரான்கான் மீது மேலும் ஒரு வழக்கு

வியாழக்கிழமை, 21 செப்டம்பர் 2023      உலகம்
Imran-Khan-3

லாகூர், வன்முறைக்கு மூளையாக செயல்பட்டதாக இம்ரான்கான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், கடந்த மே 9-ம் தேதி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, நாடு தழுவிய அளவில் போராட்டங்கள், வன்முறை நடைபெற்றது. இதை தொடர்ந்து இம்ரான்கான் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். 

வன்முறையின் போது ராவல்பிண்டியில் உள்ள ராணுவ தலைமையகம் உட்பட அரசாங்க கட்டிடங்கள் சேதப்படுத்தப்பட்டன. போலீஸ் மற்றும் பிற பாதுகாப்பு அமைப்புகளின் 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. 

இந்த வன்முறைக்கு மூளையாக செயல்பட்டதாக இம்ரான்கான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து