முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளராக ரமேஷ் பிதுரி எம்.பி. நியமனம்: எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம்

வியாழக்கிழமை, 28 செப்டம்பர் 2023      தமிழகம்
Ramesh-Bidhuri-MP

புது டெல்லி, ராஜஸ்தான் மாநிலம், டோங்க் மாவட்டத்தின் பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளராக அக்கட்சியின் எம்பி ரமேஷ் பிதுரி நியமிக்கப்பட்டிருப்பதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளன. 

தெற்கு டெல்லி தொகுதியின் பா.ஜ.க. எம்.பியான ரமேஷ் பிதுரி. இவர் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் சந்திரயான் 3 குறித்த விவாதத்தின் போது, சக எம்.பியான பகுஜன் சமாஜ் கட்சியின் டேனிஷ் அலியை நோக்கி கூறிய கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.    ரமேஷ் பிதுரியின் பேச்சுக்காக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வருத்தம் தெரிவித்தார். அதேபோல், சபாநாயகர் ஓம் பிர்லாவும் கடுமையான எச்சரிக்கையை ரமேஷ் பிதுரிக்கு விடுத்தார். அதோடு, ரமேஷ் பிதுரியிடம் விளக்கம் கேட்டு பா.ஜ.க. நோட்டீஸ் அனுப்பியிருந்தது. பாராளுமன்றத்தில் சக உறுப்பினர் மீது வெறுப்புணர்வை வெளிப்படுத்திய ரமேஷ் பிதுரி மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வந்தனர். 

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம், டோங்க் மாவட்டத்தின் பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளராக எம்.பி. ரமேஷ் பிதுரியை அக்கட்சி நியமித்துள்ளது. வெறுப்பு பேச்சுக்கான வெகுமதியாக புதிய பொறுப்பை ரமேஷ் பிதுரிக்கு பா.ஜ.க. கொடுத்து இருப்பதாக எதிர்க்கட்சிகள் சாடியுள்ளன. இதுகுறித்து, மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, 

வெறுப்பு பேச்சுக்கு பா.ஜ.க. வெகுமதி கொடுத்துள்ளது. ரமேஷ் பிதுரியை ராஜஸ்தான் மாநிலத்தின் டோங்க் மாவட்ட தேர்தல் பொறுப்பாளராக்கி பரிசு கொடுத்துள்ளது. டோங்கில் முஸ்லிம் மக்கள் தொகை 29.25 சதவீதம். இது அரசியல் பலன்களுக்கான வெறுப்பினை அடையாளப்படுத்தும் வகையில் உள்ளது என்று தெரிவித்துள்ளார். காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ். இது எல்லாம் அவர்களின் முட்டாள் தனம் என்று தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 1 week ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 5 days ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து