முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விண்வெளியில் 371 நாள்கள் இருந்த வீரர் ரூபியோ பூமிக்கு திரும்பினார்

வெள்ளிக்கிழமை, 29 செப்டம்பர் 2023      உலகம்
Frank-Rubio 2023-09-29

Source: provided

தற்செயலாக நடந்த விபத்தினால், கடந்த 371 நாள்களாக விண்வெளியில் தங்கியிருந்த விண்வெளி வீரர் பிராங்க் ரூபியோ இறுதியாக பூமிக்குத் திரும்பினார்.

அவரது விண்கலம் சேதமடைந்ததால், துரதிருஷ்டவசமாக விண்வெளியில் தங்கவேண்டிய நிலைக்கு ஆளான ரூபியோ, அதிகநாள்கள் விண்வெளியில் தங்கியிருந்த அமெரிக்கர் என்ற சாதனையையும் படைத்துவிட்டார். 

தொடர்ச்சியாக ஓராண்டுக்கும் அதிகமான நாள்கள் விண்வெளியில் தங்கியிருந்த முதல் அமெரிக்க விண்வெளி வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். அவர் தொடர்ச்சியாக 371 நாள்கள் விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கியிருந்தார்.  இதற்கு முன்பு, விண்வெளி வீரர் மார்க் வண்டே ஹேய் 355 நாள்கள் தொடர்ச்சியாக விண்வெளியில் தங்கியிருந்ததே சாதனையாக இருந்தது.

இந்த விண்வெளி வீரர், விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கியிருக்க திட்டமிட்ட காலத்தைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகம் என்று கூறப்படுகிறது.  மற்ற விண்வெளி வீரர்களுடன் ரூபியோ கடந்த 27-ம் தேதி கஜகஸ்தான் அருகே பூமியில் இறங்கினர். அவர்கள், விண்கலத்திலிருந்து வெளியே தூக்கி வரப்பட்டனர். பல நாள்களாக பூமிஈர்ப்பு சக்தி இல்லாத இடத்தில் அவர்கள் இருந்ததால், அவர்களால் உடனடியாக நடக்க முடியாது என்பதால், அவர்கள் வெளியே தூக்கி வரப்பட்டனர்.

இவர்கள் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21-ம் தேதி விண்வெளிக்குச் சென்ற போது, இவர்கள் சென்ற விண்கலத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டு, இவர்கள் பூமிக்குத் திரும்ப முடியாமல் போனது. பிறகு அந்த விண்கலம் மட்டும் பூமிக்கு அனுப்பப்பட்டு, மற்றொரு விண்கலம் கடந்த பிப்ரவரி மாதம் விண்ணுக்கு அனுப்பப்பட்டது. தற்செயலாக நடந்த இந்த நிகழ்வின் மூலம் ஒரு சாதனையைப் படைக்க நினைத்த ரூபியோ, அங்கேயே தங்கி விட்டார். தற்போது பூமிக்குத் திரும்பியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 1 week ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 5 days ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து