முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெங்களூருவில் நடிகரின் கார் மோதி பெண் பலி

ஞாயிற்றுக்கிழமை, 1 அக்டோபர் 2023      சினிமா
Nagabhushana 2023-10-01

Source: provided

பெங்களூரு : பெங்களூருவில் நடைபாதையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண் மீது நடிகரின் கார் மோதியதில், அந்தப் பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து அவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

கர்நாடகா மாநிலம் பெங்களூரு நகரில் கடந்த 29-ம் தேதி கன்னட நடிகர் நாகபூஷணா என்பவரது கார், உத்தரஹல்லியில் இருந்து கோணனகுண்டே நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்போது வசந்தபுரம் வழியாக சென்ற போது நடைபாதையில் நடந்து சென்ற தம்பதிகள் மீது அவரது கார் மோதி விபத்துக்குள்ளானது. 

அந்த விபத்தில் 48 வயதான பெண் படுகாயமடைந்த நிலையில், அவரை மருத்துவமனைக்கு நடிகர் நாகபூஷணாவே அழைத்துச் சென்றார். ஆனால் அந்தப் பெண்ணின் கால்கள், தலை, வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டதால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இவ்விவகாரம் தொடர்பாக போக்குவரத்து போலீசார் நாகபூஷணா மீது வழக்கு பதிவு செய்திருந்தனர். தற்போது அவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து